பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151


151 கரங்கால் குளிர்ந்ததே கண்ணும்பஞ் சாச்சே இரங்காய் அரங்கா இனி.” என்று சொல்லித் திருநாட்டை அலங்கரித்தாக அறியக் கிடக்கின்றது. இவர் சிலேடை, திரிபு, யமகம், அந்தாதி, கலம் பகம், ஊசல் முதலியனவற்றைப் பாடுவதில் ஒப்புயர் வற்றுத் திகழ்கின்ருர். இவருடைய நூல்களே ஆராயுங் கால் இதனைத் தெளிவாக விளக்குவேன். அன்றியும் 'திவ்வியகவி’ என்ற பட்டப் பெயரே இதனைத் தெளி வுறுத்தும். இவர் இயற்றிய திருவரங்கக் கலம்பகம் மிகச் சிறப்பினையுடையது. வெண்பாப் பாடுவதில் வல்ல புகழேந்தியும், விருத்தம் பாடவல்ல கம்பநாடரும், அந்தாதி பாடுவதில் பேர்பெற்ற ஒட்டக்கூத்தரும், கலம் பகத்திற்கு என்று சிறப்பித்துச் சொல்லப்பெறும் இரட் டையர்களும், சந்தம்பாடுவதில் வல்லவரான படிக்காகப் புலவருமான பெரிய புலவர்கள் யாவரும் ஒருங்கு சேர்ந்து செய்தாலொத்த சிறப்பினையுடையது இக் கலம்பகம். ஆயினும், அம்மானையில் அய்யங்கார் அடிசறுக்கினர்’ என்று ஒரு சாரார் குறை கூறுவர். அது சிறிதும் சரியன்று என்பது ஆழ்ந்து நோக்குவார்க்குப் புலணுகும். தேன மரும் சோலை” என்று தொடங்கும் அம்மானைச் செய் புளின் ஈற்றடியிலுள்ள, சாபத்தால் அம்மானை' என்ற தொடரின் சிலேடைப் பொருளின் நயத்தையும் வரலாற்று அமைப்பையும் ஆழ்ந்த கருத்தையும் நோக்கு மிடத்து, அங்ங்ணம் இழித்துரைப்பாரது பழிப்புரை வெற்றுரையேயாம் என்பது தெற்றென விளங்கும். இந்த ஆசிரியர் செய்துள்ள சிற்றிலக்கியங்களில் எல்லாம் ஆழ்வார்கள் அருளிச் செயல்களின் செல்வாக்கும், நாத 5. திருவரங்கக் கலம்பகம்-26