பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154


#54 செயல்களும் நூல்முழுவதும் பரவி நின்று படிப்போ ரைப் பக்திச்சுவையில் திளைக்க வைக்கின்றன. முத்தி நெறிகளுள் சிறந்ததாகப் போற்றப்பெறும் சரணுகதித் தத்துவம் பல இடங்களில் வற்புறுத்தப் பெறுகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக ஆழ்வார்களின் வாக்குச் சாயல்களும் பக்தியநுபவமும் திவ்விய கவியின் திருப் பாசுரங்களில் அமைந்து கிடப்பதை நாம் கண்டு மகிழ லாம். மிடுக்கு நடையால் அமைந்த பாடல்களில் தமிழின் குழைவு நெளிந்தோடுவதைப் பாடல்களைப் பன்முறைப் படித்துச் சுவைப்போர் அநுபவித்துக் களிக் கலாம். இனி, இவற்றை எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கத் தலைப்படுகின்றேன். பிரபந்தத் தலைவனது திருவடிகளின் சிறப்புகளைக் கூறுவது பாதவகுப்பு என்ற துறையாகும். பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்" என்ற வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுக்கொப்பச் சரணமடைகின்ற உயிர்கட்கெல்லாம் உய்யத் துணையா யிருப்பது எம்பெருமானின் திருவடியாகும். “சேவி பக்கல் சேஷபூதனிழியுந் துறை, ப்ரஜை முலையிலே வாய் வைக்குமாப் போலே” (சேஷி - இறைவர்; சேஷபூதன்-சீவான்மா; ப்ரஜை குழந்தை.) என்ற முமுட்சுப்படி வாக்கியமும் ஈண்டு சிந்திக்கத் தக்கது. பாலுண்ணும் பச்சைப் பசுங்குழவி எங்ங்னம் அன்னையின் அவயவங்கள் யாவையும் விட்டு, தான் உயிர் வாழ்வதற்கிடய்ை உள்ள அவள் கொங்கையிலே வாய் T8. குறள் 10 9. முழுட்சுப் படி-நூற்பா-141