பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158


158 ஈண்டுச் சிந்திக்க வேண்டுகின்றேன். இதில் திருப்பாற் கடலில் இறைவன் நிலையைக் கூறியிருப்பது வியூக நிலை யாகும். கவலையின்றிப் பலவிடத்தும் கண்ணுறங்கு கின்ற நீ இவ்விளமகள் துயில்பெருது வருந்துதலே மாற்ற வேண்டாவோ?’ என்ற குறிப்பு முதல் இரண்டு அடிக வளில் தொனிக்கின்றதைக் கண்டு மகிழ்க, இனி, புறத்துறை அமைந்த ஒரு பாசுரத்தைக் காட்டுவேன். "மாலை மதிக்குஞ்சி ஈசனும் போதனும் வாசவனும் நூலை மதிக்கும் முனிவரும் தேவரும் நோக்கியந்தி கால மதிக்குள் வைத்தேத்தும் திருமலை கைம்மலையால் வேலை மதிக்கும் பெருமான் உறைதிரு வேங்கடமே.” (மதி - பிறைச்சந்திரன்; குஞ்சி - தலைமயிர், ஈசன் - ஆன் போதன் . நான்முகன்; வாசவன் . இந்திரன்; அத்தி - மாலை; மதி - அறிவு, கைமலை - கையாகிய மலை.) இதில் ஊர் அல்லது பதி எனப்படும் புறத்துறை அமைந்துள்ளதைக் காண்க. பிரபந்தத் தலைவன் வாழிடம் இன்ன சிறப்புடையது என்ற வாய்பாடு பொருந்தக் கூறுதல் இப் பிரபந்தத்துறையின் இலக்கண மாகும். சிவபெருமானும் நான்முகனும் தேவேந்திரனும் முனிவர்களும் காலையிலும் மாலையிலும் தம் மனத்தில் வைத்துப் போற்றுகின்ற சிறந்த மலை எதுவென்ருல், மலைபோன்ற இரண்டு கைகளாலும் திருப்பாற்கடலைக் கடைந்த எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருவேங் 12. பாடல்-2