பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159


139 கடமாகும். இங்கனம் சிறப்புடைய மலையாதல் பற்றி அது தண்டமிழில் திருமலை என்றும், வடமொழியில் ‘பூரீசைலம் என்றும் வழங்கி வருகின்றது. இத்துறை அமைந்த இன்னெரு பாட லும் கற்போருக்குக் களி விருந்தாக அமைகின்றது. 'புண்ணி யம்காமம் பொருள்வீடு பூதலத்தோர்க் களிப்பான் எண்ணி யங்காம்ன் திருத்தாதை நிற்கும்இடம் என்பரால் கண்ணி அங்குஆம் அன்பரைக் கலங்காத் திருநாட்டிருத்தி மண்ணி யங்காமல் பிறப்பறுத் தாளும் வடமலேயே.”* (புண்ணியம் - அறம்; காமன் - மன்மதன்; நண்ணிவிரும்பி; திருநாடு - பரமபதம்; அறுத்து - ஒழித்து.) தன்னிடத்து வந்து சேரும் அடியார்களின் பிறப்பை யொழித்துப் பரமபதத்தில் சேர்ப்பிக்கும் திருமலையே அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களையும் இவ்வுலகத்தினர்க்கு அளிக்கும் நினை வால் எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் இடமாகும். "திருவேங்கடமாமலே, ஒன்றுமே தொழ நம்வினை ஒயுமே' என்ற ஆழ்வாரின் அருளிச் செயல் ஈண்டு நினைக்கத்தக்கது. எம்பெருமான் 108 திவ்விய தேசங்களில் அர்ச்சாவ தாரமாக எழுந்தருளிப் பக்தர்கட்குச் சேவை சாதிப்ப தாகக் கருதும் வைணவ மரபு ஒன்று உண்டு. பயிர்த் 13." பாசுரம்.38. 14, - திருவாய்-3.3:8