பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4


4 அமையவில்லை. அவை ஒன்றையொன்று தழுவிய நிலை யில் ஒன்று சேர்ந்த கூட்டம்போல், ஒரு குழப்பமான சுருள்போல் அமைந்து கிடக்கின்றன என்பதாகக் கூறுவர் டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள்". - இந்தக் குன்றுகள் கடல் மட்டத்திற்குமேல் 1000 அடி முதல் 2,500 அடி வரை உயரமுள்ளனவாக அமைந் துள்ளன. மலேயெங்கும் புல் பூண்டுகள் காணப் பெறு கின்றன. இங்கும் அங்குமாகச் சிறுசிறு மரங்கள் தென் படுகின்றனவே அன்றி, பெரிய மலைகளைக் கொண்ட அடர்ந்த காடுகள் இல்லை. மலேயின் உயரங்காரணமாக தட்ப வெப்ப நிலையில் சிறிது மாற்றம் காணப்படு கின்றதேயன்றி, பெரும்பாலும் அந் நிலை மலையைச் சூழ்ந்துள்ள சமவெளியின் தட்ப வெட்ப நிலையையே ஒத் துள்ளது என்று கூறலாம். இன்று வனப்பாதுகாப்புத் துறையினர் பல இடங்களில் யூகலிப்டஸ் மரங்களே வளர்த்து வருகின்றனர். தேவையான மழையின்மை காரணமாக அவை நீலகிரி மலையிலுள்ளவை போன்று செழித்து உயர்ந்து வளரவில்லை. இருபது முப்பது ஆண்டுகட்கு முன்பு ஆண்டின் சில திங்களில் மலையின் மீது மலேரியா நோய் தலைகாட்டிக் கொண்டிருந்ததாகக் கருதப் பெற்றது. ஆயினும், திருமலே-திருப்பதி தேவ ஸ்தானத்தார் மேற்கொண்ட அரிய முயற்சியினல் மலேரியா நோய் நிலைகள் முற்றிலும் இல்லாதொழிந் தன. இன்று எம்மருங்கிருந்து வரும் அடியார்கட்காக இருக்கை வசதிகளும், நீர்வசதிகளும் இயன்றவரை நல்ல முறையில் செய்யப்பெற்று வருகின்றன. ஆண்டுதோறும் அடியார்களின் கூட்டம் பெருகிக்கொண்டே வருகின் 3. A History of Tirupathi vol I, Lučālb–1.