பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162


jé2 (மருந்து - அமிர்தம்; கைக்கும் - கசக்கும்; மதன் . மன்மதன்; அமர் - போர்; உந்துகைக்கு நெருங்கு வதற்கு; அண்டம் - வெண்ணெய், அண்டகோளங்கள்; திறந்தான் - பிறந்தவன்; அப்பன் - திருவேங்கடமுடை யான்; பரியும் - அன்பு கொள்ளும்; எண்தமர்-மதிக்கத் தக்க அடியார்கள்; துகைக்கும் - மிதிக்கின்ற; பொடி - திருவடிப் புழுதி.; என்பது பாசுரம். திருவேங்கட முடையாளுகிய தலைவனைக் களவொழுக்கத்தால் கூடிப் பிரிகின்ருள் தலைவி (சீவான்மா), அஃதாவது, எம்பெருமான் அய்யங் காருக்கு ஒருகால் காட்சி கொடுத்து மறைகின்ருன். அதல்ை தலைவி பலவாறு நோவுபடுகின்ருள். அத் துயரம் மாத்திரத்தையே கண்ட செவிலித்தாயர் அந் நோயின் காரணமும் அதனைப் போக்கும் முறையும் இன்னதென உணராது வேறுவகையாக ஆராய்ந்து பொருத்தமற்ற முறையை மேற்கொள்ளத் தொடங்கு கின்றனர். நோய் ஒன்றும் மருந்தொன்றுமாதலால் அந்நோய் தீராது வளர்ந்தது. அதனை ஆற்ற மாட்டாத தலைவி நாணம் துறந்து தானே தனது நோயினையும், நோயின் காரணத்தையும் அந்நோய் தீர்க்கும் மருந்தையும், அம்மருந்தைத் தரும் முறை யினையும் உணர்த்துகின்ருள். திருவேங்கட முடை யானின் அடியார்களின் திருவடிப் புழுதியைக் காப்பாக இடுமாறு கூறுகின்ருள் தலைவி. இதல்ை தலைவியின் களவைத் தந்தை முதலியோர் படிப்படியாக அறிந்து அத்தலைவனுக்கே தன்னை மணம் செய்துவைப்பர். இப்பாசுரம், . . 18. தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்றலும், தோழி செவிலிக்கு ஆறத்தொடு நிதறலுமே முன்றி இலக்கண மரபு.அது முறை மாறியுள்ளது. இங்கு.