பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164


ió4 தண்அனையே நல்ல சார்வாக வேங்கடஞ் சார்ந்துமணி வண்ணனையே யடைந்தேற்கு இல்லையோ தொல்லை வைகுந்தமே.' (அவை - கண்நனையாமை, நெஞ்சுருகாமை; தண் அனையே ; தண்ணளியையுடைய தாயான பெரிய பிராட்டியாரையே; சார்வாக துணையாக; தொல்லை . அநாதியான.) என்று தன் நிலையை விளக்கித் தனக்கும் வைகுந்தப் பதவி கிடைப்பது உறுதி என்பதைப் புலப்படுத்துவர். சீவான்மாக்கள் அவரவர் வினவயத்தால் தேவர் கள், விலங்குகள், மனிதர்கள், தாவரங்கள் போன்ற வடிவாகப் பிறப்பார்கள் என்பதும், எம்பெருமாளுகிய பரமான்மா அங்ங்ணமின்றித் தன் இச்சை காரணமாக நல்லோரை ஆட்கொள்ளும் பொருட்டும் அல்லோரை அழித்தற் பொருட்டும் அறத்தை நிலைநாட்டும் பொருட்டும் மச்சம், கூர்மம் முதலிய அவதாரங்கள் செய்கின்ருன் என்பதும் வைணவர்களின் நம்பிக்கை கன்'. சித்து, அசித்து, ஈசுவரன் என்ற தத்துவம் மூன்றில், சித்து எனப்படும் சீவான்மா ஈசுவரன் என்ற பரமான்மாவுக்கு எப்பொழுதும் அடிமையாகவும், எம் பெருமானகிய பரமான்மா சீவான்மாவுக்குத் தலைவ கைவும் இருப்பதாகக் கருதுவதும் வைணவ தத்துவ மாகும். இக்கருத்தினை நினைவில் கொண்டு திவ்வியகவி, கூறுவதைக் காண்போம். 'தானவ னுகம ருப்பொசித் தானுக்குத் தானுகந்த 21. பாடல். -46 22. பாடல், 87