பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168


$ 53 இன்னெரு பாசுரத்தில் ஐம்பொறிகளின் கொடு மையையும் தன்னுடைய அநந்யகதித்துவத்தையும்" வெளியிடுகின்ருர் அய்யங்கார். "கருத்தா தரிக்கும் அடியேனத் தள்ளக் கருதிக்கொலோ திருத்தா தரிக்கும் ஐவர்க்கிரை ஆக்கினை செண்பகத்தின் மருத்தா தரிக்கும் அருவிஅரு வடவேங் கடத்துள் ஒருத்தா தரிக்கும்படி எங்கனே இனியுன்னே விட்டே." (கருத்து-மனத்தில்; ஆதரித்தல்-விரும்புதல்; கருதி. எண்ணி; திருத்தாது-சீர்திருத்தாமல்; அரிக்கும் - கெடுக் கும்; ஐவர்-ஐம்பொறிகள்; மரு-மணம்; தாது-மகரந்தப் பொடி, அரிக்கும்-அரித்துக் கொண்டு வரும்; அரு. நீங்காத; ஒருத்தா-ஒப்பற்ற கடவுளே; தரிக்கும்படிஉய்யும் வகை.) - என்ற பாடலில் ‘உன்னைவிட்டு உய்யும் வகை எவ்வாருே? என்று தன் பரிதாப நிலையை ஆசிரியர் புலப்படுத்து வதைக் கண்டு மகிழ்க. திருவேங்கடமுடையானின் பெருமை: அன்பர்களே, இந்த நூலில் திருவேங்கட முடை யானின் பெருமையும் பல பாடல்களில் நுவலப் பெறு கின்றது. ஒன்றிரண்டு இடங்களே இப்பொழுது காண் போம். - 25. அருந்ய கதித்துவம் - இறைவனையன்றி வேருெரு இரட்சகனையின்றி யிருக்கும் நில்ை. றி முரு 25. பாடல்-41