பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172


173 லாம். முன்னரே ஒன்றிரண்டு இடங்களைக் காட்டினேன். ஈண்டு மேலும் சில இடங்களைக் காட்டுவேன். "வேங்கட மாலைஅவியா மதிவிளக் கேற்றி அங்கம் ஆம்கடம் ஆலயம் ஆக்கிவைத் தோமவன் சேவடிக்கே தீங்குஅட மாலைக் கவிபுனைக் தோமிதிற் சீரியதே யாம்கடம் மால்.ஐ ராவதம் ஏறி யிருக்குமதே?’’’ (அவியா-கெடாத; மதி-அறிவு; அங்கம்-உறுப்புகள்; கடம்-உடம்பு; தீங்கு.பிறவித் துன்பம்; கடம்-மத மயக்கம்.) பேரின்பத்துக்கு இடமாகுமாறு எம்பெருமானைச் சிந்தை யிற்கொண்டு தியானித்து அறிவு முழுவதையும் அவன் பக்கலிலே செலுத்தி அவனது சொரூபத்தை உணர்ந்து அவன்மீது பாமாலைபாடி அவனை வழிபடுதலைக் காட்டி லும், சிற்றின்பத்திற்கே இடமான தேவேந்திரபதவி சிறிதும் சிறவாது என்றுகூறி, பகவத் கைங்கரியத்தில் தம் ஊற்றத்தைப் புலப்படுத்துகின்ருர் அய்யங்கார். இப்பாசுரத்தின் முதல் இரண்டு அடிகள், 'அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக - இன்புருகு சிந்தை இடுதிரியா கன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ்புரிந்த கான்." - என்ற பூதத்தாழ்வார் பாடலையும், 33. பாடல்-3 34. இரண்-திருவந்-1