பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175


17s (நிரந்து பரவி; கைக் கொண்டு - வசப்படுத்திக் கொண்டு; காலம் பெற விரைவாக; புக்கு - புகுந்து; வேதப்பிரானர் - நான் முகனுக்கு மறையை உணர்த் தியவர்; பட்டினம் - பட்டினமாகிய ஆன்மா, பண்டு . பழைய நிலை; காப்பு - காக்கப் பெற்றது.} என்பது முதலாகக் கூறும் பெரியாழ்வாரின் அருளிச் செயல்களே அடியொட்டியது. தலைவ்னைப் பிரிந்த தலைவி கடலொடு புலம்புவதாக திருவேங்கடத்தந்தாதியில் ஒரு பாசுரம் பொய்கையாழ் வாரின் அருளிச்செயலை அடியொட்டியது. இரண்டை யும் அடியில் கண்டு ஒப்பு நோக்குவோம். “ஒருமாதவனி யொருமாது செல்வி உடனுறைய வருமா தவனின் மகுடம் வில்வீச வடமலைமேல் கருமா தவன்கண் ணனின்பாற் றிருநெடுங் கண்வளர்கைக் கருமா தவமென்ன செய்தாய் பணியெனக் கம்புதியே." (அவனி-பூதேவி; செல்வி-சீதேவி; ஆதவன்.சூரியன்; வில் - ஒளி; கரு கரிய, கண் வளர்தல் - உறங்குதல்; அரு மா தவம் - அரிய பெரிய தவம்; பணி - சொல்க; அம்புதி - கடல்: தலைவி இதில் அருகிலுள்ள கடலே முன்னிலைப் படுத்திக் "கடலே, திருமால் எப்பொழுதும் உன்னிடத்திலே பொருந்தி கண் வளர்தற்கு என்ன தவம் செய்தாய்? சொல்லுக” என்று இரங்கி வினவுகின்ருள். 44, பாடல் 10