பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179


179 தாரானைப் போதனைத் தந்தானே யெந்தையைச் சாடிறப்பாய்க்(து) ஊரான மேய்த்துப்புள் ஊர்ந்தானைப் பஞ்சவர்க் குய்த்துகின்ற தேரான நான்மறை தேர்ந்தானத் தேருதுக் தீதறுமே.' (பேர் ஆனை - பெரிய யானை, கோடு - கொம்பு; பேர்த்தானை - பேர்த்து எடுத்தவணை; பேணும் - விரும்பும், துழாய்த் தாரான் - துழாய் மாலையையுடை யவன்; போதன் . நான்முகன்; சாடு - சகடாசுரன்; இற - முறியும்படி, ஊர் ஆனை - ஊரிலுள்ள பசுக்களை; புள் - கருடன்; உய்த்து - செலுத்தி; தேரான - தேரை யுடையவனே; தேரும் - அறிந்து துதியுங்கள்; தீது அறும் - துன்பங்கள் நீங்கும்.) இது, திருமலையை விரும்பி இடமாகக்கொண்ட எம்பெரு மானைத் துதித்தால், துன்பங்களெல்லாம் நீங்கும் என்று கூறுவதாக அமைந்த பாசுரமாகும். இதில் பேரானேபேர்ந்தானை, தாரானே-தந்தானே, ஊரான-ஊர்ந்தானை, தேரானே-தேர்ந்தானே என்பவை எதிர்மறையும் - உடன்பாடுமாய்ச் சொற்போக்கில் ஒன்றுக்கொன்று மாறுபடுவதாக மேல்நோக்கில் தோற்றிலுைம் பொருளை யுணருமிடத்து உள்நோக்கில் வேறுவகையாகப் பொருள் பட்டு மாறுபாடின்றி முடிவது அறிந்து இன்புறத்தக்கது. பாசுரத்தைப் பலமுறை படித்து அநுபவித்தால் கவிதை இன்பத்தை எட்டிப் பிடிக்கலாம். இறுதியாக ஒரு பாசுரத்தில் ஆழங்கால் படுவோம். திருமலையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானத் திவ்வியகவி மரகத ரத்தினமாகக் கண்டு அநுபவிக்கிரு.ர். 瓦 பாடல் 83