பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182


$82 என்ற ஆழ்வார்களின் வாக்குகளாலும் இதனை அறிய லாம். இங்குத் திருவேங்கடம் என்பது திருமலையைக் குறிப்பதுடன் அத் திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானேயும் குறிக்கும்; உபலட்சணம். 'தேச்ய ரான பெருமாளைச் சொன்ன தெல்லாம் உபஸர்ஜந கோடியிலேயாய் அத்தேசமேயாய்த்து, இத்திருமலைக்கு விஷயம்" என்ற வியாக்கியானப் பகுதியையும் ஈண்டு நோக்குக. நூறு வெண்பாக்களாலமைந்த இந்நூலில் புறமாக முற்பகுதியில் காப்புச் செய்யுட்கள் இரண்டும், அவை படக்கச் செய்யுள் ஒன்றும், நூலின் இறுதியில் தற் சிறப்புப் பாயிரச் செய்யுள் ஒன்றும் அமைந்துள்ளன. நூலிலுள்ள நூறு செய்யுட்களிலும் முன்னிரண்டு அடி களில் திருவேங்கடத்தின் சிறப்பும் பின்னிரண்டடிகளில் திருவேங்கடமுடையானது சிறப்பும் கூறப்பெற்று 'ஊர்' என்னும் துறையமைய திருவேங்கடம் எ ன் ப து திருமாலின் திருப்பதி என்னும் வாய்பாடு பொருந்து மாறு நூல் அமைந்துள்ளது. அன்றியும், இந்நூலின் பிற் பகுதியாகிய ஐம்பது செய்யுட்களின் முன்னிரண்டடிகள் மேற்கூறப்பெற்ற தன்மையுடன் 'சிலேடை என்னும் அணியையும் கொண்டுள்ளன. மேலும், இந்நூலின் செய்யுட்களெல்லாவற்றிலும் பின்னிரண்டடிகள் பெரும் பாலும் திரிபு என்னும் சொல்லணியும், சிறுபான்மை 'யமகம்' என்னும் சொல்லணியும் அமைய யாக்கப்பெற் றுள்ளன. வைணவப் பற்று மிக்க இந் நூலாசிரியர் காப்புச் செய்யுட்களில் முதலில் வைணவர்கள் வழிபடு கடவு ளாகப் போற்றும் நம்மாழ்வார் வணக்கத்துடனும்; அடுத்து எடுத்துக்கொண்ட நூலின் தலைவகைத் திகழும் திருவேங்கடமுடையான் வணக்கத்துடனும் நூலைத்