பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183


#83 தொடங்குகின்ருர். மறந்தும் புறந்தொழா வீர வைணவ ராதலின் வேங்கடத்து மாலையன்றிப் பிற கடவுளரைப் போற்ருத தன்னுடைய திண்ணிய மனவுறுதியையும் புலப்படுத்துகின்ருர், 'மூலமே என்றகரி முன்வந் திடர்தொலைத்து நீலமே கம்போல் கின்ரு:னப்-பாலாய வேலைகடு வில்துயிலும் வித்தகனை வேங்கடத்து மாலையன்றிப் பாடாதென் வாய்." - (மூலம் - ஆதி மூலம்; கரி - யானே; இடர் - துன்பம்; பாலாய வேலை - பால்மயமான கடல்.) பாடலின் முன்னிரண்டடிகளில் வேங்கடத்தின் சிறப்பும் பின்னிரண்டடிகளில் அங்கு எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையானின் பெருமையும் பேசப்பெறு பவை என்று மேலே குறிப்பிட்டேன். அதனை ஈண்டுக் காட்டுவேன். "மாலைக்கோ லித்திரியும் வையகத்தோர் தம்பிறவி வேலைக்கோர் வங்கமாம் வேங்கடமே-சோலைத் தருமா தரைநட்டான் தண்முல்லை ஆயர் தருமா தரைகட்டான் சார்பு.' (மாலை - மயக்கத்தை; கோலி - கொண்டு; வேலை - கடல்; வங்கம் - மரக்கலம்; தரு - பாரிஜாத மரம்; மா தரை. பெரிய பூமி, மாதரை..மகளிரை; நட்டான் - விரும்பிக்கூடினன்.) பிறவிப் பெருங்கடலுக்கு வங்கமாகத் திகழ்வது திருவேங் கடமலை என்பதாக முன்னிரண்டடிகளில் கூறினர். பின் விரண்டடிகளில் ஆயர்மகளிரைக் கூடிய கண்ணன் உம்ப 58. காப்பு - 2 59 பாடல் 3