பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187


#87 இரண்டாவதாக : வேங்கடமலையின் உயர்ச்சியைக் கூறுங்கால் பல செய்திகள் மிகச் சுவைபடக் கூறப்பெறு கின்றன. திருவேங்கட மலையிலுள்ன பொன்மயமான திருக்கோயிலின் ஒளி மிகுதியாக வீசுதலால் பகலோ னின் தேர்க்குதிரைகள் கண்கூச்சமடைந்து கண்விழிக்க இயலாது கண்மூடி அம்மலையின் உயர்வில்ை அதில் கால் இடறுகின்றன." இப்பகுதியில் பன்னிரண்டு இராசிகளில் மேடம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்றவைகள் மலையின் உயர்வுடன் பொருத்திக் காட்டப்பெறும் திறம் எண்ணி எண்ணி மகிழ்தற்குரியது, - 'வாடப் பசித்த வரியுழுவை வாலாட்டி மேடத்தைப் பார்த்துறுக்கும் வேங்கடமே." (வரி உழுவை - வரிப்புலி, வாலாட்டுதல் - கோபக்குறி; மேடம் - ஆடு.) என்பதில் திருவேங்கடமலையிலுள்ள பசியால் வாடிய புலி யொன்று வானத்திலுள்ள ஆட்டுக்கிடா வடிவுள்ள மேடராசியைப் பார்த்துச் சீறுகின்றது. மேடத்தைப் பார்த்திருக்கும் வேங்கடமே என்ற பாடத்திற்கும் புலி யானது தன் உணவிற்கும் வலிமைக்கும் தகுந்ததாகிய இடபராசியை எதிர் நோக்கிக்கொண்டு, அவ்வகை வலிமை இல்லாத மேடராசியைக் கண்டு வெறுத்திருக் கும் என்றும் பொருள் கொள்ளலாம். மலையில் தாவிக் குதித்து விளையாடும் குரங்குகள் அதன் தண்குவட்டில் பொருந்தி வரும் நண்டு வடிவமான கடகராசியைக் கண்டு வெருவியோடுகின்றன. இ. பாடல் 9 70, பாடல் * 16