பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189


189 கண்டு அஞ்சி நடுங்குகின்றது. ஓங்கி வளர்ந்திருக்கும் மரக்கொம்பொன்றிலுள்ளதேனிருல் விண்ணில்செல்லும் பிறைச்சந்திரனது வளைந்தவடிவமாகிய கொம்பு படுத லால் உடைந்து தேனைச் சொரிகின்றது. அத்தேன் அதற்கு நேராக வரும் குடவடிவமான கும்பராசியில் நிறைந்து வழிகின்றது. திருமலையிலுள்ள கோனேரியில் மீன்பிடிக்கக் காத்திருக்கும் கூனலிள வெண்குருகு ஒன்று வானத்தில் செல்லும் மீன்வடிவமான மீனராசியின் நிழல் நீரில் தெரியக் கண்டு அதனை உண்மையான மீன் என்று கருதிக் கொத்தி ஏமாந்து போகின்றது." இதுகாறும் இராசிமண்டலத்தில் தம் கற்பனையைச் செலுத்தின. கவிஞர் விண்மீன் மண்டலத்தில் கவனத் தைச் செலுத்துகின்ருர். . "மண்மூலக் தாவென்று மந்திகடு வற்குரைப்ப விண்மூலம் கேட்டேங்கும் வேங்கடமே." (மண்மூலம் - கிழங்கு; விண்மூலம் - மூல நட்சத் திரம்.) என்பதில் குரங்கின் பேச்சைக் காட்டுகின்ருர், பெண் குரங்கொன்று ஆண்குரங்கை நோக்கி உண்பதற்கு ‘மூலம் தா என்று கேட்கின்றது. வானத்திலுள்ள விண் மீளுகிய மூலம் தன்னைப் பிடித்துக் கொடுக்கச் சொன்ன தாகக் கருதி அஞ்சிக் கலங்குகின்றது. இந்த வருணனை களிலெல்லாம் குறிஞ்சிநிலக் கருப்பொருள்களே கூறப் பெற்றிருத்தல் கண்டு மகிழத்தக்கது. ம களி ர் 77. பாடல் -22 78. பாடல் - 23 79. பாடல் - 24 80. பாடல் 25