பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191


191 என்ற அடிகளில் விண்ணை எட்டுமாறு வளர்ந்துள்ள பாக்கு மரங்கள் உம்பருலகத்துக் கற்பகச் சோலையாகிய பந்தலுக்கு நாட்டப்பெற்ற அழகிய கால்கள் போல் காட்சி யளிப்பது கூறப்பெறுகின்றது. அப்பாக்குமரத்தில் வெடித்த நிலையிலுள்ள வெண்ணிறப்பாளைகள் வெங்கதி ரோனுக்கு அசைக்கப்பெறும் வெண்கவரிபோல் காட்சி அளிக்கின்றன. . "தண்கமுகின் பாளை தடங்கதிரின் செல்வனுக்கு வெண்கவரி போலசையும் வேங்கடமே." (கதிரின் செல்வன் - சூரியன்) என்று கூறுவர் திவ்விய கவி. முழுமதியம் வானத்தில் இறுமாந்து உலவுகின்றது. அப்பொழுது அருகில் செல்லும் மதயாணையொன்று அத்திங்களை இனிய பாலில் கலந்த உணவுத் திரளை என்று கருதித் துதிக்கையை நீட்டிய வண்ணம் உள்ளது." - --- நான்காவதாக வேங்கட மலையின் வேறு சில காட்சி களிலும் ஆழங்கால் படுவோம். வேங்கடமலையிலுள்ள தென்னை மரத்தில் வெண்மையான பாளே மலர்ந்து கிடக்கின்றது. சுனை நீ ரி லு ள் ள மீன்கூட்டங்கள் அதனைக் கொக்கு என்று கருதி நீரினுள் அஞ்சி மறை கின்றன. தென்னை மரத்தினின்றும் இளநீர்க் காய்கள் கீழே வீழ்தலால் அம்மலையிலுள்ள இரத்தினங்கள் சிதறுகின்றன. செந்நிறமுள்ள அவற்றை நெருப்பென்று கருதி யானைகள் விலகிச் செல்லுகின்றன." வேங்கடமலை 87. பாடல் - 37 88. பாடல் - 31 89. பாடல் - 27 90. mu-si - 29