பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7


7 நக்கீரர் இந்த மலையை நெடுவரைப் பிறங்கிய வேங்கட வைப்பு என்று குறிப்பிடுவர் தம் பாடலில் இவர் பிரிவிடை ஆற்ருள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்ததாகப் பாடியுள்ளார். பொருள் வயிற் பிரிந்த தலைவன் சென்ற சுரநெறியைக் குறிப்பிடுங்கால் வடவேங்கடமலையின் குறிப்பு வருகின்றது. "பல்பொறிப் புலிக்கேழ் உற்ற பூவிடைப் பெருஞ்சினை கரந்த நறும்பூ நாண்மலர் உதிரக் கலைபாய்ந்து உகளும் கல்சேர் வேங்கைத் தேங்கமழ் நெடுவரைப் பிறங்கிய வேங்கட வைப்பிற் சுரன் இறந் தோரே.

  • 3

(பொறி-புள்ளிகள்; புலிக்கேழ்-புவியின் நிறம், நரந்தம்-நாரத்தை மரம்; நாள் மலர்-புதிய பூக்கள்; கலை-முசுக்கலை; உகளும்-தாவும்; தேம் கமழ்-தேன் நாறும்; பிறங்கிய-விளங்கிய; வேங்கட வைப்பு-வேங்கட மலை; சுரன் இறந்தோர்-சுரநெறியைக் கடந்து சென்ருேர். என்ற பாடற் பகுதியில் அக் குறிப்பினைக் காண்க. வேங்கை மரத்தின் பூக்கள் பல புள்ளிகளையுடைய புலி யின் நிறத்தையொப்பக் கீழே உதிர்ந்து கிடக்கின்றன. வேங்கை மரங்களின் இடையே நாரத்தை மரங்களும் காணப் பெறுகின்றன. இவற்றினிடையே முசுக்கலைகள் பாய்ந்து தாவுவதால் நாரத்தையின் புதிய மலர்கள் உதிர்கின்றன. இத்தகைய சூழ்நிலையையும் தேன் நாறும் சிமையங்களையும் கொண்டது வேங்கட வைப்பு என்று இந்த மலையை நமக்குக் காட்டுவர் நக்கீரர் பெருமான். 5. அகம்-141,