பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193


193 மலர்கள் காந்தள் மலர்களின்மீது விழுகின்றன. இக் காட்சி ஈகைக்குணமுடைய வேந்தன் இரவலர் கையில் பொன்னச் சொரிவது போல் உள்ளது என்று கூறுகின் ருர் கவிஞர். செந்நிறமான பதுமராகக் கல்லேச் சுற்றிக் கொண்டு இருக்கும் பெரியமலைப்பாம்பு சூரியனைச் சுற்றிக் காணப்பெறும் ஊர்கோள் வட்டம்போல் காட்சியளிக் கின்றது." குறவர்கள் யானையின்மீது மாணிக்கக் கற்களை வீசியெறிகின்றனர். அவை முகிலினிடையில் காணப் பெறும் மின்னல்போல் திகழ்கின்றன. மாணிக்கப் பாறையின்மீது தாவிப்பாயும் குரங்குகள் செங்கதிரோன் மண்டலத்தின் மீது பாயும் அதுமனைப்போல் தோன்று கின்றன. திருமலையின்மீதுள்ள வெண்ணிறமான பளிக்குப் பாறையில் உறங்கும் மான் திங்கள் மண்டிலத் தின் நடுவில் காணப்பெறும் மானே ஒத்துள்ளது." "கொம்பின் இருல் வாங்ககிமிர் குஞ்சரத்தை அம்புலிமேல் வெம்பியெழும் கோள்அரவாம் வேங்கடமே." (கொம்பு - கிளை; இருல் - தேனடை, குஞ்சரம் - யானை, வெம்பி - கோபித்து; கோளரவு - இராகு.) என்ற வரிகளில் காட்டப்பெறும் காட்சி நம் சிந்தை யைக் கவர்கின்றது. மரக்கொம்பில் .ெ த | ங் கு ம் தேனிருலைக் கவர்வதற்குக் கைநீட்டுகின்றது கானில் திரியும் வேழம். அக்காட்சி திங்களைப் பற்றுதற்கு அதன் 94. பாடல் - 45 95. பாடல் - 47 96. பாடல் . 46 97. பாடல் - 48 98. பாடல் - 50 99, பாடல் . 49