பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195


195 போன்ற குறைகள் யாவற்றையும் தீர்த்து வைப்பது திருவேங்கடமாகும்." ஆருவதாக: அன்பர்களே, நூலின் பிற்பாதியிலுள்ள முன்னிரண்டடிகள் பாடல்களின் சிலேடை அணியைக் கொண்டிருப்பதாக மேலே குறிப்பிட்டேன் அல்லவா? அந்த அணி வகைகளை எடுத்துக்காட்டும் முகத்தான் மேலும் வேங்கடத்தின் பெருமைகள் சிலவற்றைக் கூறு வேன். "காதலித்துச் சார்ந்தவர்க்கும் காமியத்தைச் சார்ந்தவர்க்கும் வேதனைக்கூற் றைத்தவிர்க்கும் வேங்கடம்" (இற்று நீங்கி, காமியம் வாழ்வில் விருப்பம்: வேதனை - நான்முகனை, துன்பங்களே.j என்பது ஒரு பாடலின் முதலிரண்டடிகள். பூவுலக வாழ் வில் ஆசை முழுதும் ஒழித்துத் தன்னிடம் வந்துசேர்ந்த முனிவர்கட்கும், பிரமனேயும் யமனையும் விலக்குவது வேங் கடம்; பிறப்பையும் இறப்பையும் ஒழிக்கும் என்றவாறு. நிலவுலக வாழ்வினை விரும்பியவர்கட்கும் துன்பவகை களை ஒழிப்பது திருவேங்கடம். இரண்டாவது அடியி லுள்ள "வேதனைக் கூற்றைத் தவிர்க்கும்” என்ற அடி சிலேடைப் பொருளில் அமைந்தது. வேதனை-பிரமனே; கூற்றை-யமனை என்பது முதற் பொருள். வேதனைக் கூற்றை-துன்பங்களின் வகைகளை; இஃது இரண்டாவது பொருள். "கேள்வித் துறவோரும் கேடறவில் வாழ்வோரும் வேள்விக் கினமாற்றும் வேங்கடம்." 105. பாடல் - 15 106. பாடல் - 51 107. பாடல் - 52