பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196


శ్రీ கேள்வி - ஞானக்கேள்வி; கேடு அற இல் . தீங்கில் லாமல்; வேள்விக்கினம்-மன்மதனல் வரும் இடையூறு, வேள்விக்கு இனம் - யாகத்து இனமான நற்செயல்கள்.) என்பது இன்னொரு பாடலின் முன்னிரண்டடிகள். இவற் றில் "வேள்விக் கினமாற்றும்" என்பது சிலேடையணி அமைந்த சொற்ருெடர் ஆகும். ஞானக் கேள்விகளை யுடைய துறவியரும் மன்மதனல் வரும் துன்பத்தை நீக்கு வதற்குரிய இடம் திருவேங்கடம். அங்கனமே, தீங்கில்லா மல் இல்லறவொழுக்க த்தில் வாழ்பவர்களும் யாகத் திற்கு இனமான நற்செயல்களைச் செய்தற்கு இடமாக உள்ளது திருமலை. அண்மையில் அகண்ட வேள்வி' ஒன்று நடைபெற்றதை நாடு நன்கு அறியும். இங்ங்னமே அடியவர்கள்-வேடர்கள்", குறத்தியர் -சித்தர், கிட்டு நெறி யோகியர்-கிள்ளைகள், கந்தர்வர்-தவர்', மனேவாழ்க்கை நீத்தவர்-வாளரி' என்றவாறெல்லாம் இணைப் பொருள்களை அமைத்து இருபொருள்படும்படி திருவேங்கடமலையின் சிறப்பினைக் கூறும் செய்திகள் சொல் விருந்தாக அமைந்து களி பேருவகை பயக்கின்றன. விரிவஞ்சி அவை ஈண்டு விடப் பெறுகின்றன. இங்ங்ணம் எம்பெருமானின் படை ப் பாகிய அசித்தும் சீவர்களின் வினைகளைப் போக்கும் தத்துவக் கருத்து அழகுடன் எடுத்தோதப் பெறும் நேர்த்தியை இப்பகுதிப் பாடல்களில் கண்டுகளிக்க முடி கின்றது. 108. பாடல் , 54 109. பாடல் - 56 110. பாடல் 73 11. பாடல் - 58 1i2. பாடல் 91