பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204


264 என்று எம்பெருமானின் எளிமைக் குணத்தையும் சிறப்பாக விதந்து ஒதுவர். கண்ணன் எளியவகை வீட்டிற்கு எழுந்தருளியமையை நினைந்து, - "என்ன மாத்வம் செய்ததது இச்சிறுகுடில்!" என்று கூறிய விதுரன் வாக்கின இன்றும் வைணவப் பெருமக்கள் அடிக்கடிச் சொல்லி மகிழ்வதை நாம் காண லாம். எம்பெருமான் திருவேங்கடமலையில் எழுந்தருளி யிருப்பதே அவனது செளலப்பிய குணத்தைக் (எளிமை யைக்) க்ாட்டுவதாகும். ஆகவே, இந்நூலிலுள்ள நூறுபாடல்களும் அர்ச்சையைக் குறிப்பிடுகின்றன என்று கூறுவதிலும் தவறு இல்லை. பக்தர்களைக் காத்தல்: தனக்கு அடிமைப்பட்டவர்கள் பிழை செய்தால் அதனைப் பொறுத்தலும், குற்றமாகப் பாராட்டாது விடுதலே யன்றிக் குணமாகக் கொள்ளுதலும் எம்பெரு மானது இயல்பு என்று நம்புபவர்கள் வைணவப் பெரு மக்கள். 'தன்அடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும் சிதடு உரைக்குமேல் என்அடியார் அதுசெய்தார் செய்தாரேல் நன்றுசெய்தார் என்பர் போலும்." زA \ o |சிதடு -குற்றங்கள்; இதில், பரிந்துரை செய்யும் எம்பெருமாட்டிகூட குற்றங் களைக் கணக்கிட்டுக் கூறத் தொடங்கிலுைம் எம் பெருமான்'என் அடியர் அது செய்யார் என்று கூறி 149. வில்லிபாரதம் - உத்தி - கிருட்டிணன் து.ாது -80 150. பெரியாழ் திரு. 4.92 .