பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206


206 இறைபொழுதிற் கொணர்ந்துகொடுத் தொருப்பித்த உறைப்பனூர்' என்ற பாசுரப் பகுதியில் குறிப்பிட்ட வரலாற்றையே தினைந்து கூறுவர் இந்த ஆசிரியர். இதனைத் தவிர, கிருஷ்ணுவதாரத்தில் கூனியின் கூனே நிமிர்த்தியமை' பாஞ்சாலியின் ஆடையை வளர்த்து மானங்காத்தமை' குன்றமேந்திக் குளிர்மழை காத்தமை' போன்ற வரலாறுகளையும் காட்டி அடியார்களேக் கா க் கு ம் உண்மையை மேலும் அரண் செய்வர்; சரணமடைந்த வர்க்கு வைகுந்தமும் ஈவர் என்று வலியுறுத்துவர்." இத்தன்மையுடைய எம்பெருமானே திருவேங்கடத்தில் எழுந்தருளியிருப்பதாகப் பாசுரங்கள் தோறும் பகர்வர். வீரச்செயல்களும் வெற்றிச் சிறப்புகளும்: எம்பெருமானுடைய வீரச் செயல்களையும் வெற்றிச் சிறப்புக்களையும் பேசிப் பகவதநுபவம் பெறுவது ஆழ்வார் பெருமக்களின் இயல்பு என்பதை இரண்டாவது சொற் பொழிவில் குறிப்பிட்டேன். 'ஆழி எழ சங்கும்' எனத் தொடங்கும் திருவாய் மொழியால் இதனை அறியலாம். ஆழ்வார்கள் மேற்கொண்ட மரபினைப் பின்பற்றியே நம் திவ்வியகவியும் இறையநுபவம் பெறுகின்ருர். அதனை ஈண்டும் விளக்க முற்படுகின்றேன். இந்நூலில் திவ்விய கவியின் பாடல்களில் கிருஷ்ணு வதார நிகழ்ச்சிகள் அதிகமாகக் கூறப்பெற்றுள்ளன. 155. பாடல் - 58 156. Lirri. 6) – 65 157. பாடல் . 66 158. பாடல் - 55 159. திருவாய்-7.4 160. பாடல் -16; பாடல் $1 ஐயும் காண்க.