பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209


209 யும்," கஜேந்திரனுக்கு அபயமளித்தமையும்", கடல் கடைந்து தேவருக்கு அமுதையும் சிவபெருமானுக்கு நஞ்சையும் அளித்தமையும்' ஆசிரியர் தமது பாடல் களில் எடுத்துக் கூறிப் பரவசப்படுகின்ருர். அர்ச்சாவதாரத்தில் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியின் மாலை ஏற்றல்', திருமங்கையாழ்வாரின் திருப்பாசுரங்களை ஏற்றருளுதல்" முதலாழ்வார்களின் திருவந்தாதிகளை ஆதரித்தல்" ஆகிய செயல்களும் எடுத்தியம்பப் பெறுகின்றன. இத்தகைய வெற்றிச் செயல்களையெல்லாம் நிகழ்த்தியவனே திருவேங்கட முடையாளுகக் காட்சியளிக்கின்ருன் என்பது ஆசிரி யரின் திருவுள்ளமாகும். அன்பர்களே, இதுகாறும் திவ்விய கவி படைத் தளித்த திருவேங்கடமாலே என்ற சொல் மாலையில் கட்டப்பெற்றுத் தமிழ்மணம் வீசும் வாடாமலர்களாகத் திகழும் பல பாசுரங்களின் சுவையில் ஈடுபட்டுத் திளைத் தோம். இந்நிலையில் பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் அவர்கட்குத் திவ்விய கவி’ என்ற அடைப் பொருத்தம் நுட்பமாக அமைந்திருக்கும் அருமைப்பாட்டையும் எண்ணி மகிழ்கின்ருேம். - - 179. பாடல் - 21 180 பாடல் -23 181 unru do - 41 #82 Łurri-do - 60 183 பபுடல் . 70 184 பாடல் 11 வேங்.-14