பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211


211 களும், உறுப்புகளும் பயின்று வரும் நூல் கலம்பகம்’ என்று பெயர் பெற்றது என்று சொல்லலாம். கலம்பகம்-பெயர்க்காரணம் : 'கலம்பகம்’ என்ற சொல்லைப்பற்றியும் சில கூறுவேன். கலம்பகம்’ என்பதை வடசொல் என்று குறிப்பிடுவர் ஒரு சாரார். இவர்கள் கலம்+பகம் எனப் பிரித்து, பன்னிரண்டு மரக்கால்' எனப் பொருள்படும் 'கலம் என்னும் சொல்லும் இறைவனது ஆறு குணங் களைக் குறிக்கும் பகம்’ என்ற சொல்லும் குறிப்பாய்ப் பன்னிரண்டு ஆறு என்னும் தொகையை மாத்திரம் உணர்த்தி, உம்மைத் தொகையாகப் புணர்ந்து பதி னெட்டு உறுப்புகளையுடைய சிற்றிலக்கியத்திற்கு ஏதுப் பெயராயிற்று என்று கூறுவர். இவர்களே கலம்-பன் னிரண்டு, பகம்-அதில் பாதி; அஃதாவது ஆறு என்று பொருள் கொண்டு பதினெட்டு உறுப்புகள் உடையது 'கலம்பகம்’ என்றும் உரைப்பர். பதினெட்டு உறுப்பு களாவன: புய வகுப்பு, மதங்கு, அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்பனவாம். பிறிதொரு சாரார் கலப்பு-அகம் எனப் பிரித்து, மெலித்தல் விகாரம் பெற்றதாக்கி, பல உறுப்பு களும் கலத்தலைத் தன்னிடத்தே யுடையதென அன் மொழிக் காரணக் குறியாகச் கொள்வர். இவர் கருத்துப் படி கலம்பகம்’ என்பது தமிழ்ச் சொல்லாகும். 187. ஆறுகுணங்களாவன : ஞானம், சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம், தேஜஸ் என்பவை,