பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215


Ží5 எழுந்தருளியிருக்கும் அபிடேகவல்லித் தாயார் எடுத்து வளர்த்து வந்ததாகச் செவிவழிச் செய்தியால் அறி கின்ருேம். அன்னையின் கருணையால் இளமையிலேயே முத்தமிழையும் ஐயந்திரிபறக் கற்றுத் துறை போய வித்தகராகத் திகழ்ந்தார். அத் திருப்பதித் தாயார் மீதும் 'திருக்கண்ண மங்கை மாலை என ஒரு சிற்றிலக்கியம் இயற்றியருளினர். சில ஆண்டுகட்குப் பிறகு தொண்டை நாட்டிற்குத் திரும்பி, வல்லிபுரத்திற்கு அருகிலுள்ள திம்மூரில் வாழ்ந்திருந்தனர். t இங்ங்ணம் வாழ்ந்து வருங்கால் ஒருசமயம் காஞ்சி நகருக்குச் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் அத்திகிரி அருளாளரையும் பெருந்தேவித் தாயாரையும் வணங்கி அவர்கள் மீது பஞ்சரத்னம் பாடிப் பரவிஞர். இந் நிலையில் எம்பெருமானின் திருமாலை தானே இவர் கழுத் தில் விழுந்தது. அதனைக் கண்ணுற்ற வைணவப் பெரு மக்கள் மிகவியப்புற்று இவருக்குக் கோவில் மரியாதைகள் அனைத்தையும் செய்தனர்; அத்திருப்பதியில் சிலகாலம் தங்கியிருக்கச் செய்து உபசரித்தனர். அன்றியும்; ஆண்டுக் கிவ்வளவு என்று தானியம் முதலியன அயல் ஊர்களிலிருந்து கிடைக்குமாறும் செய்தனர். இவர் இற்றைக்குச் சற்றேறக்குறைய 450 ஆண்டு கட்கு முன்னர் வாழ்ந்தவர் என்று கூறப்பெறுகின்றது. வைணவ சமயத்தைச் சார்ந்த இவர் செய்துள்ள வேறு நூல்கள் : பாலூர்க் கலம்பகம், செய்யூர்ப் பிள்ளைத்தமிழ், சில தனிப் பாடல்கள் முதலியனவாகும். பாட்டின்பம் : இனி, நூலினுள் புகுந்து சில பாடல்களைப் பயின்று பாட்டின்பத்தில் திளேக்க முற்படுவேன். நூலே முற்ற