பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216


216 - ஆய்ந்து இன்பந்துய்த்ததற்குக்காலமும் இடமும் போதா தாகையால், கவிஞரின் செவ்வியை எடுத்துக் காட்டு முகத்தான் கலம்பக உறுப்புகளுள் ஒரு சிலவற்றுக்குரிய பாக்களே ஆய்ந்து இன்பந் துய்ப்பதே சாலும் எனக் கருதுகின்றேன். அவற்றைத் தமிழ் அன்பர்கட்கு இன்சுவை விருந்தாக அளிக்க முயல்கின்றேன். முதற்பாடல் : இப்பாடல் தரவும் தாழிசையும் அராகமும், மீண்டும் தாழிசையும் அம்போதரங்கங்களும் தனிச் சொல்லும் சுரிதகமும் பெற்றுவந்த மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவால் அமைந்தது. 'மலர்மேவு திருமகளும் வாட்டடங்கண் கிலமகளும் மலர்மேவு குழல்நீளை அணங்குமிரு மருங்கிருப்ப வலளுேங்கு பரமபத மாமணிம்ன் டபத்திலமர் கலளுேங்கு பரம்பொருளாய் நான்குவியூ கமுமானுய் உபயகிரிப் புயராம ைெடுகண்ணன் முதலான விபவவுருவமுமெடுத்து வீறுமுயிர் தொறுங்குடிகொள் அந்தரியா மியுமான தமையாமே எளிதாக விரிந்தநெடு வேங்கடத்தில் எல்லோரும் தொழகின்ருய்" என்பது எட்டடித் தரவு. இதில் எம்பெருமானுடைய பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம்,அர்ச்சை என்னும் ஐந்து நிலைகளின் தன்மை கூறப்பெறுகின்றது. பரம் முதலிய நான்கு சொரூபமும் காலவடைவிலே உயிர்களை உய்விக்க மாட்டாமையை நோக்கி, எம்பெருமான் தனது இயல்பான பெருங்கருணையால் அர்ச்சை வடிவ மாகத் திருவேங்கடத்தில் நின்ற கோலமாகச் சேவை சாதிக்கின்ருன் என்பதை இப் பகுதியில் புலப்படுத்து கின்ருர் ஆசிரியர். . . -