பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217


2,7 அடுத்து வரும் ஆறு ஈரடித் தாழிசைகளிலும், மாவலி யிடம் முவடிமண் இரந்து பெற்றமை, பாலகய்ை ஏழுல குண்டு ஆலிலையில் துயின்றமை, நான்முகனுக்கு நான் மறை உணர்த்தினமை, கண்ணகை அவதரித்த காலத் தில் சாந்தீபிநி முனிவரிடம் கல்விபயின்றமை, மத்துறு கடைவெண்ணெய் கவ வினில் உண்டதால் உரலினில் யாப்புண்ட எளிமை, திரிவிக்கிரமாவதாரத்தில் உற்பத்தி யான கங்கையின் வரலாறு, அந்தக் கங்கையைக் குகனது அம்பியின் மூலம் கடந்தமை போன்ற செய்திகளைக் கூறும் முகத்தான் இறையநுபவத்தில் ஆழங்கால் படுகின்ருர் ஆசிரியர். இப்பகுதியை அடுத்தனவாகவுள்ள நான்கு ஈரடி அராகங்களிலும் காளியன் முடிமீது திருநட னம் புரிந்தமை, குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தமை, பாஞ்சாலியின் துகிலுரியப்பெற்றபோது அதனை வளரச் செய்து அவளது கற்பைக் காத்தமை, ஆனையின் துயரம் தீரப் புள்ளுர்ந்து சென்று நின்று ஆழிதொட்டமை ஆகிய எம்பெருமானின் வெற்றிச் செயல்களை எண்ணி எண்ணி இனியராகின்ருர். இவற்றினை மீண்டும் அடுத்து வரும் ஆறு ஈரடித் தாழிசைகளிலும், எம்பெருமானின் ஆச்சரியமான திருவிளையாடல்களைச் சிந்தித்து மகிழ் கின்ருர், மச்சாவதார காலத்தில் ஒரு புற முள்ளினிடத்து அடங்கிக் கிடந்த பெருங்கடலை பல மலைகளால் அனை கட்டியதும், திருப்பாற்கடலைக் கடைந்து தேவர்கட்கு அமுதளித்த பெருமான் ஆயர்பாடியில் வெண்ணெய் பெறும்பொருட்டுக் கூத்தாடியதும், நான்முகனே நாபிக் கமலத்தில் பிள்ளையாகப் பெற்ற எம்பெருமான் தசர தனது பிள்ளை என்று பெரிய திருநாமத்தைப் பெற்றதும், உம்பர் முதல் யாவர்க்கும் உயர்வாழ்வைப் பணித்தருளு கின்றவன் இம்பர் தரும் காணிக்கைப் பொருள்களை இச்சியா நின்றதும், தொண்டைமான் சக்கரவர்த்தி