பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221


221 இவள் கிளிகளுக்கும், குயில்களுக்கும், மயில்களுக்கும், தோழியர்க்கும், இன்னிசை முரலும் வண்டுகளுக்கும் மாடப்புருக்களின் கூட்டத்திற்கும், துணையுடன் கூடி மகிழும் நாகணவாய்ப் பறவைகட்கும், அன்னங்கட்கும், ஏனே மேகங்களுக்கும்கூட, தனது வேட்கையினை அடக் காமல் வெளியிடுகின்ருள். இந் நிலையில் ஊர் வாயை மூடுவதற்கு ஒரு விரகு உண்டோ? என்று செவிலித்தாய் இரங்கிக் கூறுகின்ருள். காமம் மிக்க கழிபடர் கிளவி களாகத் தன் மகள், கிளி முதலியவற்றிடம் கூறுவதைக் கேட்ட செவிலித்தாய் தன் மகள் நிலைக்கு இரங்கிக் கூறு வதாக அமைந்த இப் பாடல் தலைவியின் பகவத் காமத்தையே நுவல்கின்றது. தலைவி கூற்ருக வரும் இன்னெரு பாடல் நம் சிந்தைக்குப் பெருவிருந்தாக அமைகின்றது. அப்பாடலைப் பின்னர்ப் பொருத்தமான ஒரிடத்தில் காட்டி விளக்குவேன். இங்ங்னம் இந்நூலில் ‘இரங்கல் துறையில் பதின்மூன்று பாடல்கள்' காணப் பெறுகின்றன. அவை யாவும் வெவ்வேறு பாவடிவு பெற்றுத் திகழ்கின்றன. காலம் : கார்காலத்தில் எங்ங்னம் தலைவனைப் பிரிந்து உயிர் வாழ்வது என்று தலைவி இரங்கி மொழிவதாக அமைந் தது இப்பாடல். 'ஆலும்அளி அங்கண்வனம் மலர்முலைபாய் காலம் அவர்பிரிவால் அங்கண்வனம் மலர்முலைபாய் காலம் கோலமயில் இனம்பரிவிற் குனித்துவரும் காலம் கொடியேன்முன் மதன்பிரிவிற் குனித்துவரும் காலம் 190. Jirgrossr-5, T13, 14, 25, 26, 32,35, 36, 39, 43, 68, 69, 75.