பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222


222 நீலமணி வண்ணன்அம்பொன் நிழல்காகம் அரையின் நெடுமாயன் மலர்ச்சோலை நிழல்நாகம் வரையின் சாலுமழைக் குலம்பலகால் தடித்துவிடும் காலம் தழற்கொழுந்தாம் எனப்பலகாற் றடித்துவிடும் காலம் 11 (ஆலும்-ஆரவாரிக்கும்; அளி-வண்டு; முலை-முல்லை மலர்கள்; கண் வனம்-கண்களின் நீர்; அலர் முலை-அடிபரந்த கொங்கை, கோலம்.அழகிய பரிவு. அன்பு; குனித்து-கூத்தாடி, பரி வில்-கரும்பு வில்; குணித்து-வளைத்து; நாகம்-பீதாம்பரம்; நாகம்-மலை; சாலும்-மிகுந்த; பல கால்-பல முறை; தடித்து விடும். மின்னலை வீசுகின்ற; பல காற்று-வலிய காற்று.) 'ஆரவாரிக்கும் வண்டுகள் அம்மலையின்கண் உள்ள சோலைகளில் முல்லைமலர்களில் பாய்கின்ற காலமும், கணவன் பிரிவால் தலைவியின் கண்ணிர் அவளது அடி பரந்த கொங்கைகளில் பாய்கின்ற காலமும், அழகிய மயில் கூட்டங்கள் அன்புடன் ஆடிவரும் காலமும், என் எதிரில் காமன் கரும்பு வில்லை வளைத்துப் போர் செய்யும் காலமும், நீலமணி போன்ற திருநிறத்தையுடையவன கிய அழகிய பொன்மய பீதக ஆடையை உடுத்த திரு வரையையுடைய மாயனது பூஞ்சோலைகளின் சாயையை யுடைய அரவக்கிரியில் மேகங்களின் கூட்டம் பன்முறை மின்னலை வீசுகின்ற காலமும், நெருப்புச் சுவாலை என்னும் படி வலிய காற்று வீசி வருகின்ற காலமும் ஆகிய கார் காலத்தில் யான் எங்ஙனம் தலைவனைப் பிரிந்து உயிர் வாழ்வது?’ என்று இரங்கிக் கூறுகின்ருள் தலைவி. 191. பாசுரம்-55,