பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227


227 கின்றன். அவ்வமயம் தலைவி பாணனை வெகுண்டு கூறு வதாக அமைந்தது இப்பாடல். 'துரச் சுரங்கள்பல சேர்க்கும் துணைநீ அறிவாய் என இருந்தேன்; வீரத் திருவேங் கடத்தான வேற்று மடவா ரொடுசேர்த்தாய்; ஈரக் கடல்சூழ் உலகிலுனக்(கு) இணையார் பாண இமிழிசைக்கோல் ஆரப் பெருஞ்சீர் வீணைவிடுத் தகன்றிவ் வீணை அடுத்தாயே." [தூர-ஒன்ருேடொன்று தூரமாகவுள்ள; துணைஅளவை; ஈர-குளிர்ந்த, இணை-சமமானர்ை, இமிழ். இனிமையாக ஒலிக்கும்; இசை-ஸ்வரம்; கோல்-நரம்பு கள்; ஆர்-அமைந்த; அ-அத்தன்மையதான, சீர்சிறப்பு வீணை-இசைக் கருவி; அகன்று-விட்டுவிலகி, வீன-பயனில் செயல்.) இதில், "பாணனே! சுரங்களை இசைத்துப் பாடும் திறனைமட்டிலும் உடையவன் என உன்னை நினைத்திருந் தேன். அதுவேயன்றி நீ பராக்கிரமமிக்க திருவேங்கடத் தானைவேறு மகளிருடனும் சேர்த்துவைத்தாய். ஆதலின் இவ்வுலகில் உனக்கு நிகர் யார் உளர்? இனிமையாக ஒலிக்கும் சுரங்களையுடைய நரம்புகள் அமைந்த வீணையை விட்டு விலகி, இந்த வீணையை (பயனில் செயலை) மேற். கொண்டாய்” என்று பாணனுடன் வெகுண்டு கூறு கின்ருள் தலைவி. - 195. பாசுரம்-60,