பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228


சித்து: இரசவாதிகள் தமது திறமையை ஒரு தலைவனுக்கு எடுத்துக் கூறுவதாகச் செய்யுள் அமைப்பது சித்து' என்னும் உறுப்பின் இலக்கணம் ஆகும். “உரையாலும் மனத்தாலும் அளக்கொளுத ஓங்குபுகழ் வேங்கடவன் உபய பாதம் மரையாசைச் சித்தரியாம் பலகாகத் தில்வலிய வாகிய இரும்பை வருவித் தந்தக் கரையாத இரும்பையெல்லாம் பணங்களென்னக் காண்பித்தோம்; அவ்வளவோ? கரிய தோலும் அரையாரத் தோலுடுத்தோன் இடமும் கைகொள் அச்சிலையும் மாதங்கம் ஆக்கி ைேமே.”* (உரை-வாக்கு, உபயம்-இரண்டு; மரை-தாமரை, சித்தர்-சித்தராவேம்; யாம்-நாங்கள்; நாகம்-துத்த நாகம், பாம்பு; வருவித்து-உண்டாகச்செய்து; கரை யாத-உருகாத; அரை-இடுப்பு; தோல்-புலித்தோல், இடம்-இருப்பிடம், இடப்பக்கம்; சிலைகல், வில்; மாதங் கம்-மாற்றுயர்ந்த பொன், யானை; மாது அங்கம்-உ1ை. யின் திருமேனி.) இதில், நாங்கள் வாக்கால் சொல்லியும், நெஞ்சால் எண்ணியும் அளவிடமுடியாத உயர்ந்த புகழையுடைய திருவேங்கடமுடையானது இணையடிகளினிடத்தே விருப் பத்தையுடைய சித்தராவோம். பல துத்த நாகங்களில் வலிமையுடையனவான இரும்புகளே உண்டாகச் செய்து உருகாத அந்த இரும்புகளே எல்லாம் செம்பு நாணயுங் களாகக் காட்டினேம் (வலிமையுடைய பாம்புகளிடத் 196, பாகரம் 10