பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230


笼箕 மகனிடம் போந்து அத்தழையினிடத்து உண்டான தலை மகளது விருப்பத்தைக் கூறுகின்ருள். இதுவே தழை விருப்புரைத்தல் என்ற கலம்பக உறுப்பாகும். 'அடுத்தாரை வாழ்விக்கும் மால்வட வேங்கடம் அன்ன மன்னு, கொடுத்தாய் நறுந்தழை; யான்கொண்டு போந்து கொடுத்தவுடன், எடுத்தாள்: விழியொற்றிக் கொண்டாள்; கைப்போதினெடு ஈர்ந்தழைமேல் படுத்தாள்; நிற்கும்பொழுது ஓர்கொம்பு போன்றனள் பால்மொழியே”.* (அடுத்தார்-சரணமடைந்தோர்; மால்-திருமால்; அன்ன-ஒத்த; நறு-நல்ல; விழி-கண், கை போதுகையிலுள்ள மலர்; ஈர்-குளிர்ந்த, பால்மொழி-இனிய சொல்.) என்ற பாசுரத்தில் 'தன்னைச் சரணம் அடைந்தவர் களை வாழ்விக்கும் மாலவன் குன்றத்தை யொத்த தலைவனே, நீ நல்ல தழையை என்னிடம் கொடுத்தா யன்ருே? நான் அதனை எடுத்துச் சென்று கொம்பு போன்றவளும் பால்போல் இனிய சொல்லையும் உடைய வளுமாகிய என் தலைவியிடம் சேர்ப்பித்தேன். பெற்ற வுடன் அவள் அத்தழையை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். கையிற் கொண்டுள்ள மலருடனே அத்தழையையே தலைவகைப் பாவித்து அநுபவித்த திறத்தினைப் புலப்படுத்துகின்ருள் தோழி. 202, பாசுரம்.5!