பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234


234 மாவிடம் என் காதலை எடுத்துரைக்காது அவனது திருக் கைகளையும், திருவடிகளையும், திருக்கண்களேயும், திரு வாயையும் தாமரை மலர் என்று கருதி அவற்றி னிடையே பறந்து திரிந்து கொண்டு என்னேயும் மறந்து விட்டது” என்று தலைவி இரங்கிக் கூறுகின்றதைக் காண்க. பக்திச்சுவை சிறிதும் சிதையாமல் அமைந்து திகழும் இத்துறைப் பாடல் பன்முறை படித்து இன்புறத்தக்கது. அன்பர்களே, இதுகாறும் கலம்பக இலக்கியத்தின் சில உறுப்புகளைப்பற்றிக் கவனித்து வந்தோம்; பாட்டின்பத்தில் திளைத்தோம். இங்ங்ணம் சிற்றிலக் கியங்களை ஆழ்ந்து கற்றலால் தனிப்பேரின்பம் தலைப் படக் காணலாம். இனி, பொதுவான சில கருத்து களைக் கண்டு மகிழ்வோம். பக்திச்சுவை : இந்தச் சிற்றிலக்கியத்தில் சொற்சுவையும் பொருட் சுவையும் மலிந்து காணப் பெறுவதுடன், பக்திச் சுவை யும் விஞ்சி நிற்கின்றது. நெஞ்சத்தை நோக்கிக் கூறும் ஒரு பாடலில் இச்சுவை தெளிவாகத் தென்படுகின்றது. "பதின்மர்செந் தமிழைநீ படிக்கிலாய் கேளாய் படித்தபேர் தாளையும் பணியாய் எதிபதி சரணே சரணமென் ருெருகால் இசைக்கிலாய் எமதுவேங் கடத்தைத் துதிசெயாய் யிருந்த விடத்திருந் தேனும் தொழுகிலாய் வாழிஎன் மனனே மதிநுதல் அலர்மேல் மங்கைநாயகனர் மலர்ப்பதம் கிடைப்பதெவ் விதமே." 205, பாசுரம்-24,