பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235


235 (பதின்மர்.பத்து ஆழ்வார்கள் எதிபதி.சந்நியாசி களின் தலைவர் (இராமாநுசர்); இசைக்கிலாய்-சொல்ல மாட்டாய்; மதிநுதல்-சந்திரன் போன்ற நெற்ற.) இப்பாடலில் ஆழ்வார்கள் அருளிச் செயல்களில் ஆழங்கால் படுதல் முதலிய நெறிகளை மேற்கொண்டு எம்பெருமானது திருவடிப் பேற்றினை அடையுமாறு நெஞ்சிற்கு உபதேசித்தலைக் காண்க. இன்னெரு பாடலில் மன்னுயிர்களை நோக்கி உபதேசம் செய்கின்ருர், 'சரதம் கதிபெறலாம் தாலத்து உயிர்காள் நிரதம் அவனை கினையீர்-அருமறையும் செப்பரிய எண்ணத்தான் சேடகிரி யான்கரத்தில் அப்பரிய வெண்ணத்தான் ஆல்.' [தாலத்து-பூமியிலுள்ள; நிரதம்-இடைவிடாமல்; எண்ணம்-சிந்தை; சேடகிரி-சேஷாசலம், கரம்-கை; அ பரிய-அந்தப் பெருமையுடைய, வெள் நத்தான்வெண்ணிறச் சங்கினையுடைய..} பெரியாழ்வார் “படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியமும்" என்ருற்போல, இந்த ஆசிரியரும் 'அப் பரிய வெண்ணத்தான்' என்ருர். பெரியாழ்வாரின் பாசுர அடிக்குப் பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கி யானமும் ஈண்டுச் சிந்திக்கத் தக்கது. 'முன்னிலையா யிருக்கப் பரோr நிர்த்தேசம் பண்ணுவானென் னென் னில், புத்திரனை அலங்கரித்த தாய் தன் கண் படிலும் கண்ணெச்சிலாம் என்று பார்க்கக் கூசுமாப்போலே, 207, பாசுரம்.28 - 208. பெரியாழ். திரு. திருப்பல், 2.