பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238


238 தலும் தனக்குப் போதும் என்று கூறியவர் குலசேகரப் பெருமாள். "செம்பவள வாயான் திருவேங் கடமென்னும் எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே." என்று கூறிய ஆழ்வாரின் வாக்கினை நாம் நன்கு அறி வோம். இதனையொட்டி இந்த நூலாசிரியரும், 'மாடாக நிழற்றுசெழு மரகைத் தவச்சிறிய பூடாகக் குழைத்தாறும் புதலாக வழிப்படுமோர் ஓடாகப் பெறுவமெனில் உயிர்காள்!நற் கதிபெறலாம் வீடாகத் திருநெடுமால் வீற்றிருக்கும் வேங்கடத்தே." (மாடு-விலங்கு; நிழற்று-நிழல் தரும்; பூடு-பூண்டு; புதல்-புதர்; வழி படும்-வழியில்கிடக்கும்.) என்று பாடுவர். 'திருநெடுமால் தனது இருப்பிடமாக உகந்து கொண்டிருக்கும் திருவேங்கடத்தில் விலங்காக வாயினும், நிழலைத்தரும் செழுமரமாக வாயினும், மிகச் சிறிய புல் பூண்டுகளாகவாயினும், தளிர்த்த நல்ல புதராக வாயினும், வழியில் கிடப்பதொரு ஒடாகவாயி னும் இருக்கப் பெறுவோமென்ருல் நாம் சிறந்த நற்கதி பெறலாம்” என்று சீவர்களை நோக்கிக் கூறுகின்ருர் இப் பாடலில். - - இன்னொரு பாடலில் எம் பெருமான் எழுந்தருளி யிருக்கும் சில இடங்களைக் குறிப்பிடும் ஆசிரியர் திருவேங் கடம் என்னும் அழகிய திருமலையையும் அவற்றுள் ஒன்ருகக் குறிப்பிடுவர். - 213. பெரு. திரு. 4:10 214. பாசுரம்-72