பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239


239 “மாதவத்தோர் சிந்தையுமாம் மாமறையின் உச்சியுமாம் கோதகற்று வேங்கடப்பொற் குன்றமுமாம்-சீதமலர் எட்டக் கரத்தான் இடம்திகழ்சங் கோன்குருந்தை எட்டக் கரத்தான் இடம்.' (மறை-வேதம்; உச்சி-உபநிடதம்; கோது-குற்றம்; சிதம் மலர்-குளிர்ச்சிமிக்க மலர்; அக்கரம்-அட்சரம், எழுத்து; குருந்தை எட்டு அகரத்தான்-குருத்த மரத்தை எட்டினகையை புடையவன்.) என்ற பாடலில் இதனைக் கண்டு மகிழ்க, எம்பெருமானின் உடலாக விளங்கும் அசித்தும்’ வழிபடுவதற்கு உரியது என்ற கொள்கையையுடைய வர்கள் ஆழ்வார் பெருமக்கள் என்பதனை இரண்டாவது சொற்பொழிவில் குறிப்பிட்டேன். எடுத்துக் காட்டாக, 'மதிதவழ் குடுமி மாலிருஞ் சோலைப் பதியது ஏத்தி எழுவது பயனே.' என்றும், பரன், சென்று சேர்திரு வேங்கட மாமாலை ஒன்று மேதொழ நம்வினை ஒயுமே.' என்றும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியினையும் கூறி னேன். அதனை ஈண்டு நினைவு கூர வேண்டுகின்றேன். அந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் இந்த ஆசிரியரும் திருமலையின் பெருமையினை ஆங்காங்குக் கூறிச் செல்லுகின்ருர். 215. பாசுரம்-63. 216. திருவாய். 2. 10 : 2. 217. திருவாய், 3. 3 : 8.