பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245


245 ஆனத-நீங்காத, கீர்த்தி-புகழ்; ஆதரிக்க-அன்பு வைக்க, தாரணி-பூமி, மேல்நாள்-அளுதிக்ாலம்; மானி டம்-மனிதர்கள்; நிா-நாக்கு; சுத்தம் மேவுதல்-து:ய்மை யடைதல்; ஆசையால்-விருப்பத்தால்.) இதுகாறும் தான் நாக்கொண்டு மானிடம் பாடிய' அழுக்கு நீங்க, எம்பெருமானின் புண்ணியத் திருநாமத் தைத் துதிப்பதாகக் கூறுகின்ருர் ஆசிரியர் இதில். இதனுல்தான் இவர் பாடிய கலம்பகமாலை 'பக்தியின் துதி பாடின மாலை' ஆகின்றது. நூலின் இறுதிப் பாடலில் தன்னைத் தொண்ட ருக்கும் தொண்டகைக் கூறி வைணவ மரபினகைப் புலப்படுத்திக் கொள்ளுகின்ருர் ஆசிரியர். 'கண்ணு யிரம்பெற்ற கோன்உல கோங்கிய கற்பகக்காத் தண்ணுரும் பூவையும் வேண்டிலம்; வேண்டித் தலைக்கணியூ எண்ணுர்க் கிருளன்ன வேங்கடத் தான்தொண்டர் ஏவற்ருெழில் பண்ணுசைத் தொண்டரவர் தொண்டர் தொண்டர் பதமலரே." (தண்ஆரும்-குளிர்ச்சி நிறைந்த; வேண்டி-விரும்பி; எண்ணுர்க்கு - தியானிக்காதவர்களுக்கு; இருள்அஞ்ஞான இருட்டு; தொண்டர் - அடியார்களது; ஏவில் தொழில்-ஏவிய சிறுதொழில்; பண்-செய் கின்ற; ஆசை.அன்பையுடைய; தொண்டரவர்அடியார்களின்; தொண்டர்-அடிப்ார்களது; பத மலர்-திருவடித் தாமரை.) - உம்பர் உலகத்துக் கற்பகமலரையும் தான் விரும்பவில்லை என்றும், திருவேங்கட முடையானின் தொண்டர்களின் திருப்பாத மலரே தான் விரும்பும் மலர் என்றும் கூறித் 226. பாசுரம்-100.