பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246


246 தமது ஆழ்ந்த வைணவப்பற்றைப் புலப்படுத்திக் கொள்ளுகின்ருர். இப் பாடலின் வேங்கடத்தான் தொண்டர்...தொண்டரவர் தொண்டர் தொண்டர்’ என்ற அடி அவா அற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபனின் 'நாயகன்-தன் அடிமை, நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்," "புனல்-பள்ளி அப்பனுக்கே, தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்” 'எந்தைபிரான் தனக்கு, அடியார் அடியார்-தம் அடியார் அடியார் தமக்கு, அடியார் அடியார்-தம் அடியார்அடியோங்களே' என்ற திருவாய் மொழியின் அடிகளை நினைக்கச் செய்கின்றன. - இறுதியாக, நம் முத்தமிழ்க் கவி சமயக் காழ்ப் பற்றவர் என்பதற்கு ஒருசான்று காட்டி இந்நூலாராய்ச்சி யினைத் தலைக்கட்டுகின்றேன். - 'ஆக்குங் தொழிற்கு விரிஞ்சியைவைத் தழிக்குந் தொழிற்குச் சிவனேவைத்துக் காக்குங் தொழில்தான் கைக்கொள் அருட்கடவுள் வடவேங் கடம்" |விரிஞ்சி-நான்முகன்) என்ற பாடற்பகுதியில் படைக்கும் கடவுளாக நான் முகனையும், அழிக்கும் கடவுளாகச் சிவனையும், காக்கும் கடவுளாகத்திருமாலையும் கூறியுள்ளனரேயன்றி ஒருவரை யும் ஏத்தியோ தாழ்த்தியோ கூருமை கவனிக்கத் தக்கது. திருமாவை ஏத்திக் கூறுமிடத்திலும் சிவனே இழித்துக்கூறும் வழக்க முடையவரல்லர் இந்த ஆசிரியர். 227. திருவாய்.8.9:11 228. திருவாய்-7.1:11 229. திருவாய்-3.7:10. 230. பாசுரம்-71