பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247


24} 'கேசவளுர் சேட கிரிமாயர்க் கைந்துமுகத் தீசனதி பத்தன் இதுசரதம்- நேசமிகச் சங்கங்கை ஏந்துமவர் தாட்புனலென் றேதினமும் அங்கங்கை சென்னிவைத்தான் ஆல். ' - சேடகிரிமாயர்-திருவேங்கடமுடையான், ஐந்துமுகத்து ஈசன்-சிவன்; அதிபத்தன்-மிகுந்த பக்தியையுடைய வன்; தாள்புனல்-திருவடித்தீர்த்தம்; நேசம்-அன்பு; அம்கங்கை.அழகிய கங்கை; சென்னி-தலை.) என்ற பாடலில், சிவன் திருமாலடியான் என்றும், ஆதலால் அவன் திருவடியினின்றும் தோன்றின கங்கை யைத் திர்த்தமாகக் கருதித் தன் தலையின்மீது குடிக் கொண்டுள்ளான் என்றும் கூறுவதில் சிவனே இழித்துக் கூருதிருத்தல் காண்க. அன்பர்களே, இதுகாறும் முத்தமிழ்க் கவியின் மலர்ச் சோலையில் நுழைந்து பல நறுமண மலர்களைக் கண்டு நுகர்ந்தோம். செந்தமிழ்ச் சுவையினிடையே தெய்வமணமும் வீசச்செய்த முத்தமிழ் விரகரின் அருமைப் பாட்டைக் கண்டு களித்தோம். “வண்டமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்பமாரியே” என்று நம்மாழ்வார் கூறியவாறு, நம் கவிஞரும் ஆண்டவன் திருவடிகளில் சொல்மாலைகளை அழகு பெறச் சூட்டி மகிழ்ந்தார். அவர் கால்வழித் தோன்றிய நம் போலி யரும் வாடா வளம் பெற்ற அம் மாலைகளைக் கண்டு நுகர்ந்து, அவன் திருவடிகளில் அன்பினைச் செலுத்த வழியும் வகுத்த கவிஞரைப் போற்றி இந்நூல் பற்றிய ஆராய்ச்சியைத் தலைக்கட்டுகின்றேன். . . . 231. பாசுரம்-54. 232. திருவாய்.10.45