பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248


4. சேடமலை பதிற்றுப் பத்தந்தாதி" அன்பர்களே, சேடமலை பதிற்றுப்பத்தந்தாதி'யைப் பற்றிச் சில கருத்துகளைத் தெரிவிப்பேன். இது சேட மலையில் (சேஷகிரி) எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் மீது பாடப் பெற்ற நூலாகும். இதை இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆயினும் இந்நூலிலுள்ள, 'சீராரு மதிவதனத் தெரிவையர்கள் மாடமிசைச் சென்ருங் கெய்தும் ஏராறும் அரம்பையரோ டிரணியகங் துகமாடும் எழில்வல் லூரன் பேராரும் தமிழியலெற் கோதியருள் புரிகிறவன் பிறங்கு கஞ்சத் தாராரும் புயனெவரும் புகழ்தேவ ராசவள்ளல் தனைத்து திப்பாம்.' இரணியம்-பொன்; கந்துகம்-பந்து) என்ற குருவணக்கப் பாடலால் இந்நூலாசிரியருக்குத் தமிழ்ப் பயிற்றியவர் வல்லூர் தேவராக வள்ளல் என்பார் எனத் தெரிகின்றது. இவ்வள்ளல் 19-ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த மகாவித்துவான் திரிசிரபுரம் மீளுட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மாணுக்கர்களில் ஒருவர் என்பதும், 'குசேலோபாக்கியானம்' என்ற தமிழ்நூலை இயற்றியவர் 233. அந்தாதிக் கொத்து என்ற தொகுதியில் கண்டது; t arrtř 55: Madra S Government Oriental Manuscript Series.No. 51 234. பாடல்-3