பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249


24% இவரே என்பதும் நாம் அறிந்த செய்திகளே. மகா வித்துவான் அவர்கள் பெங்களுரில் தங்கியிருந்த பொழுது, தேவராசப் பிள்ளையவர்கள் முதன்மையாக நின்று புலவர் பெருமானைக் கவனித்த செய்தியை டாக்டர் உ. வே. சாமிநாத அய்யர் அவர்கள் குறிப்பிட் டுள்ளார்கள். ஆகவே, இந் நூலாசிரியர் பத்தொன்பதாம் நூற்ருண்டில் வாழ்ந்தவர் என்பது பெறப்படுகின்றது. இந்நூலிலிருந்து இந்நூலாசிரியர் தமிழ் இலக்கண இலக் கியங்களிலும் வைணவ தத்துவ சாத்திரங்களிலும் நல்ல பயிற்சியுடையவர் என்பது திண்ணமாக அறியக் கிடக் கின்றது. நம்மாழ்வார் துதியுடன் நூல் தொடங்குவ தால் இந்நூலாசிரியர் வைணவர் என்பது புலகிைன்றது. நூல் : இந்நூல் நூறு செய்யுட்களையும், இறுதியில் ஒரு வாழ்த்துச் செய்யுளையும் கொண்டது. சேடமலை என்பது ஏழுமலைகளில் ஒன்ருகிய சேஷாத்திரி'யைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.' சேடமலை எனக் குறிப்பிடப் பெற்றிருந்தாலும் சேடமலை திருவேங்கடத்தைக் குறிப்பதாகவே கருதலாம். இது, "என்று சூழ்சிக ரத்திரு வேங்கட விரவிமீதி லினிதுறை கொண்டலே. ' என்ற பாடற் பகுதியால் உறுதிப் படுகின்றது. இந் நூலில் திருவேங்கடத்தின் சிறப்பும், அங்கு எழுந்தருளி 235, ஏழுமலைகள்: விருஷபாத்திரி,_நீலாத்திரி, அஞ்ச ஞத்திரி, சேஷ்ாத்திரி.கருடாத்திரி, நாராயணுத்திரி, வேங்கடாத்திரி. (அத்திரி-மலை). 236. பாடல்-48