பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250


250 யுள்ள எம்பெருமானின் பெருமையும், அவனுடைய அவதாரச் சிறப்பும் பரக்கக் கூறப் பெற்றுள்ளன. பாடல்களைப் படிக்குந் தோறும் அவை ஆழ்வார்களின் பாடல்களை நினைக்கச் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, "செய்ய தாமரைக் கண்ணனைப் பைந்துழாய்த் தெரியல் சூடிய நீனிற வண்ணனே ஐய நுண்ணிடைப் பார்க்கவி நேயன அமரர் உய்ய அமுதருள் மாயனத் துய்ய சேட மலையுறை தூயனைத் தோமி லாதுரை யுண்ட வாயனை வெய்ய நெஞ்சக மேநித முன்னுறில் விளங்கு வீடடை வாயிது திண்ணமே. ' என்ற இந்த நூலிலுள்ள ஒரு பாடலைப் படிக்குங்கால், அது திருவாய் மொழியிலுள்ள, 'செய்ய தாமரைக் கண்ண குய் உல கேழு முண்ட அவன் கண்டிர் வையம் வானம் மணிசர் தெய்வம்மற் றும்மற்றும் மற்றும் முற்றுமாய் செய்ய சூழ்சுடர் ஞான மாய்வெளிப் பட்டி வைபடைத் தான்பின்னும் மொய்கொள் சோதியோ டாயி னன்.ஒரு மூவராகிய மூர்த்தியே." ’’’ என்ற பாசுரத்தை நினைவிற்குக் கொண்டு வருகின்றது. சில பாடல்கள் திருமழிசை யாழ்வாரின் திருச்சந்த விருத்தப் பாசுரங்கள் போல் அமைந்து படிப்போர் 237. பாடல்-16 238. திருவாய்-3.6:1