பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13


13 பெயரால் குறித்தனர் என்று கருதலாம். இது நாளடை வில் கிட்டத்தட்ட ஒர் எல்லேக் குறியாகவே அமைந்து விட்டது. இதனைக் கடந்து அப்பாற் சென்ருல் அங்கு மக்களிடம் தமிழ் பேசப் பெருததை அறியலாம்.'" பிறிதோர் இடத்தில் அப் பேராசிரியர் தமது நூலில் "வட எல்லேயின் மிக முக்கியமான எல்லைக் குறியாக (Land mark) இருப்பது வேங்கடம் எ ன் ப த ற் கு ஐயமில்லை' என்பதாகக் கூறியிருப்பதும் சிந்திக்கத் தக்கது. திருப்பதி புகழோங்கிய காலம்: இங்ங்னம் வட எல்லேயின் முக்கிய எல்லைக் குறியாகத் திகழும் வடவேங்கடம் (திருப்பதி) எக்காலத்தில்:தமிழர் கள் யாவரும் சிறப்பாகக் கருதும் இடமாக அமைந்தது என்பதை ஆராய்தல் மிகவும் பொருத்தமாகும். திருப்பதி மிகவும் புகழ் அடைந்தது சமயச் சார்பு பற்றியதேயாகும் என்பதை நாம் நன்கு அறிவோம். இடைக்காலத்தில் தான் தல யாத்திரிகர்களின் முக்கிய இடமாக அமைந்ததற்குக் காரணம் சமயச் சார்பு பற்றியதே யாகும். சங்க காலத்தில் இச் சமயச் சார்பு இவ்விடத் திற்கு ஏற்படவில்லை; அத்தகைய சார்பு ஏற்பட்டது பிற்காலத்தில்தான். இதனை இரண்டாவது பொழிவில் தெளிவாக்க முயல்வேன். ஆயின், திருப்பதி பற்றிய சமயச் சார்பான குறிப்பு புறப்பொருள் வெண்பா மாலையிலும் சிலப்பதிகாரத்திலும் காணப்படுகின்றது. இதனையே முதன்முதலாகக் கூறப்பெறும் மிகப் பழைய குறிப்புகளாகக் கருதலாம். 10. A History of Tirupathi Vol I – už 4, 5. 11, டிெ நூல் - பக் 1.