பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257


257 கள் பத்து என்று (தசாவதாரம்) பேசும் மரபு ஒன்று வைணவர்களிடையே வழங்கி வருகின்றது. ஆல்ை, இந்த நூலாசிரியர் நாரதர், வராகம், நரநாராயணர், கபிலர், தத்தாத்திரேயேர், எக்கிய புருடர், இடபம், பிருது சக்கரவர்த்தி, மச்சம், தந்வந்திரி, மோகினி, நரசிம்மம், வாமனம், பரசுராமர், வியாசர், இராமர், பலராமர், கிருஷ்ணர், புத்தர், கல்கி என்ற இருபது அவதாரங் களைப் பற்றிப் பாடல்களைப் பாடியுள்ளார். எடுத்துக் காட்டாக, "கடங்குலவு மறைமுதல்வ சிையினில் தோன்றிக் கனகவட மகமேரு அணுவாக வளர்ந்து மடங்குலவு பொற்கண்ண னேற்ருர்த்து மோதும் வன்கதையைப் பறித்தவன்செய் வெம்மாவைநீக்கி இடங்குலவும் பிறைமருப்பால் அவன்மார்பம் பிளந்தே யெருக்கிகில வலயமெடுத் தினிதுமுன்போல் கிறுத்த திடங்குலவு வெண்கேழல் உருக்கொண்ட பெரும! சிறியவனுக் கருள்சேட மலைவாழும் கோவே.' என்ற பாடல் வராக அவதாரத்தைப் பற்றியதாகும். இந்நூலில் அறுசீர் கழில்நெடில் ஆசிரியப்பா, எழு சீர் கழில்நெடில் ஆசிரியப்பா, கட்டளைக் கலிப்பா, கொச்சகக் கலிப்பா, கலிவிருத்த வகைகள், சந்த விருத் தம் போன்ற யாப்புவகைப் பாடல்கள் அமைந்து நூலைச் சுவையாக்கியுள்ளன. இறுதியாக, . பூதலம் புகழும் சேடப் பொருப்பிறை கீர்த்தி கேட்கும் ஆதர வாளர் வாழ்க; - ஆங்கதைப் புகல்வோர் வாழ்க, 260. பாடல்.82 -----------------------------------سیاسی------------------------محصاءهم---- வேங்.-17