பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259


259 மதுரை மாவட்டத்தைச் சார்ந்த பெரியகுளம் வட்டத்திலுள்ள தேவார நகரம் என்ற ஊரில் வாழ்ந்த மதுரகவி வீரராகவசுவாமி அய்யங்கார் அவர்கள் இந்த நூலின் ஆசிரியர்; சுமார் நூறு ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்தவர். வடமொழியிலுள்ள மூல புராணங்களிற் கண்ட வேங்கடாசல மான்மியங்களைத் தொகுத்து வெளி யான வடமொழி வேங்கடாசல மான்மியத்தை நூற்று இருபது ஆண்டுகட்கு முன்பு ஒரு வைணவப் பெரியார் தமிழ்ப்படுத்தி, அது திருமலை மான்மியம் என்ற ஒர் உரைநடை நூலாகத் தமிழில் வெளியாகி இருந்தது. அந்த நூலைப் பின்பற்றி இந்தப் புராண நூல் செய்யுள் வடிவில் அமைந்தது எனத் தெரிகின்றது. இந்நூல் ஐம்பத்தொன்பது அத்தியாயங்களையும். 1482 செய்யுட் களையும் உடையது. வடமொழி வேங்கடாசல மான் மியத்தில் கண்டவாறே நூலின் ஒவ்வோர் அத்தியாயத் தின் இறுதியிலும் இன்னின்ன புராணத்தின் செய்தி இதில் அடங்கியது எனக் காட்டுகின்றது. எடுத்துக் காட்டாக, சீநிவாசன் நாராயண முனிக்கு அருள் செய்த அத்தியாயத்தில்’, - 'பேசரும் பெருமை சார்ந்த, பிரம்மாண்டம் எனும்பேர் பெற்ற மாசறு புராணங் தன்னின் வளம்பெறச் சொலுமி தெல்லாம் காசினி யதனிற் கேட்போர் கருதிய யாவும் எய்தித் தேசுற வாழ்ந்தே பின்னர்த் திருவிறை பதஞ்சேர் வாரே. ' 262. செய்யுள்-18