பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262


2部2 பெறும்போதோ, அன்றி அப்பொழிவுகளின் இரண் டாவது பதிப்பின்போதோ அவைபற்றிச் சிறிது கூறிக் குறையைப் போக்கிக் கொள்வேன். இப்பொழிவுகளைப் படிக்கும் அன்பர்கள் எவரேனும் வேறு நூல்களைக் கண்ணுறுவார்களாயின் அடியேனுக்கு விவரங்களுடன் தெரிவித்தருளக் கோருகின்றேன். 7. திருவேங்கடமுடையான் திருவாயிரம் இந்தத் தலைப்பினையுடைய தொகுப்பு நூலின் கையெழுத்துப் படியைப் பார்க்க நேர்ந்தது.' இதில் பல சிற்றிலக்கியங்கள் அடங்கியுள்ளன. அவை : 1. திருப்பல் லாண்டு, 2. திருப்பள்ளி எழுச்சி, 3. திருப்பாவை; 4. கலி வெண்பா; 5. பிள்ளைத் தமிழ், 6. கலம்பகம்; 7. பதி கங்கள்: 8. அலங்காரம், 9. ஒருபா ஒருபஃது; 10. இரட்டை மணி மாலை; 11. மும்மணிக் கோவை; 12. நான் மணி மாலை முதலியவை. இந்நூலின் ஆசிரியர் எஸ். கே. இராமராசன் என்பார். பத்து வயதுப் பாலகனக இருந்த பொழுதே யான் இவரை யறிவேன். வித்துவான் நுழை வுத் தேர்வு எழுதும் பொழுதே கவிதையாக்கும் திறன் இயல்பாகவே இவரிடம் அமைந்திருந்தது. பரம்பரையாக சிறந்த வைணவ பக்தி நிலவிய மரபின் வழி வந்தவ சாகையால், இவரிடம் திருமால் பக்தியும் துளசி மணம் போல் இயல்பாகவே அமைந்திருந்தது என்று சொல்லத் தேவை இல்லை. திருவையாற்றில் வித்துவான் வகுப்பில் படித்த காலத்திலும் இவருடன் ஏனக்கு நெருங்கிய 255. இந்த நூல் அச்சாகிக் கொண்டிருந்தபொழுது இந்த வாய்ப்பு கிட்டியது.