பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

269


269 மானைப் பாடும் பணியினையே பணியாகக் கொண்ட அருணகிரியார் கந்தன்மேல் பல நூல்களைப் பாடிப் பரவசப்பட்டார். அங்ங்ணமே சிறந்த திருமாலடியா ராகிய நம் இராமராசனும் திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கும் சீநிவாசன்மீது ஆயிரம் பாடல் களைப் பாடிக் களிப்பெய்துகின்ருர், 'பிள்ளைத் தமிழி ல் இரண்டே இரண்டு பாடல் களைக் காட்டி மேற்செல்லுவேன். பன்னிரு பாட்டியல்’ என்ற நூல் இதனைப் பிள்ளைப்பாட்டு’ என்றும், வேறு பாட்டியல் நூல்கள் பிள்ளைக்கவி என்றும் குறிப்பிடும். இது குழந்தையின் பருவத்தைப் பத்துப் பகுதிகளாகப் பிரித்துப் பகுதிக்குப் பத்தாக நூறு பாடல்களில் பாடப் பெறும் ஒரு சிற்றிலக்கியம். தாலப் பருவத்திலுள்ள ஒரு பாடலைக் காண்போம். 'உருகாக் கல்லும் பணிபோல வுடைந்து நெகிழ காரதனர் உவந்து பாடும் தனியிசையை ஒப்பில் லாத நான்மறையைப் பெருகார் வங்கொள் முத்தருளம் பேணி வழங்கு தனித்துதியைப் பிரச மலரில் வீற்றிருக்கும் பிராட்டி யிசைக்கும் கன்மொழியை, அருகே பாடும் தரங்கத்தை அமைத்த கரத்தால் நன்கடக்கி அரிய மோன வடிவாகி அருள் சேர் வழியில் புனல்பெருக்கிக் குருகா புரியார் மறைகேட்கும் கோவே தாலோ தாலேலோ குலவு திருவேங் கடம்மேவு குரிசில் தாலோ தாலேலோ!"