பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273


2? 3 இம்மூன்று தாழிசைகளும் படிப்போரை மனேன்மணிய நாடகத்தில் தமிழ்த்தாய் வணக்கமாக வரும் தாழிசை களே நினைக்கச் செய்கின்றன. எம்பெருமானின் செருக் கையும் மிடுக்கையும் மிடுக்கான நடையிலமைந்த தாழிசைகள் நினைப்பூட்டுவதையும் கண்டு மகிழலாம். கலம்பகத்தின் உறுப்புகளில் ஒன்று அம்மானே’ என்பது. மூன்று மங்கையர் பந்துகளைக் கொண்டு ஆடும் விளையாட்டு இஃது என்பதை முன்னர் விளக்கியதை நினைவுகூர வேண்டுகிறேன். அங்ங்ணம் ஆடுங்கால் பாட்டுடைத் தலைவனது இயல்பினைச் சொல்லிக் கொண்டே ஆடுவார்கள் அந்த மங்கைமார்கள். சேரலர்கோன் போற்றும் திருவேங் கடமுடையான் பாரினிடை யாண்டும் பரந்துள்ளான் அம்மானை பாரினிடை யாண்டும் பரந்துள்ள ளுமாயின் நாரியே எவ்விடத்தும் நான்காணேன் அம்மானை கான்போற்ை காணலாம் நங்கையே அம்மானே.” (சேரலர்கோன்-குலசேகரர்) என்ற பாடல் மிக அருமையாக அமைந்துள்ளது. இறைவன் எங்கும் பரந்துள்ளான் (ompresence) என்ற கருத்து இதில் நுட்பமாக அமைந்துள்ளம்ை நோக்கத் தக்கது. பொதுவாக இந்த ஆசிரியரின் பாடல்களில் ஆழ் வார் பாசுரங்களின் சாயலும் கம்பனின் சொல்வளமும் மிளிர்வதைக் காணலாம். எங்கோ சென்று அறிவியல் துறையில் பணியாற்ற வேண்டிய என்னைத் தமிழ்த் துறைக்கு ஈர்த்தவரும், தமிழ்ப்புலமைக்கு எனக்கு ஒரு கலங்கரை விளக்கம்போல் நின்று வழிகாட்டியவருமான பன்மொழிக் குரிசில் திரு. வே. வேங்கடராஜுலு ரெட்டியார் ஒரு சமயம் என்னிடம், 'பெயர் குறிப்பிடாமல் நம் வேங்,-18 -