பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274


274 இராமராசன் பாடல்களை நோக்கினல், அவற்றில் சிந்தாமணி ஆசிரியரின் கற்பனையும் சொல்வளமும் தென்படுகின்றன” என்று கூறியதை மட்டிலும் உங்கட்கு நினைவுறுத்தி மேற்செல்லுவேன். 8. திருவேங்கடவன் மாலை அன்பர்களே, வைணவ தத்துவப்படி 'உறங்குவான் போல் யோகுசெய்வான்' எம்பெருமான். உலகத்தை உய்விக்கும் பொருட்டுப் பரமபதத்தை விட்டு திருப்பாற் கடலில் கண் வளர்வதுபோல் பாவனை செய்துகொண்டு வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும் நன், அநிருத்தன் என்ற நான்கு நிலைகளில் நின்று இந்த லீலாவிபூதியின் செயல்களைக் கவனிப்பதாக வைணவ தத்துவம் பேசும்.' அங்ஙனம் உறங்கும் எம்பெருமானே எழுப்புவதாகத் தொண்டரடிப் பொடியாழ்வாரும் ஆண்டாளும் ஒருகவி மரபினை ஏற்படுத்தினர். சைவ சமய குரவர்களுள் ஒருவரான மணிவாசகப் பெருமானும் இந்த மரபினை மேற்கொண்டு திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களை அமைத் துள்ளார். இத் தமிழ் மரபினேயொட்டியே சற்றேறக் குறைய 600 ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த மணவாள மாமுனிகளின் காலத்திலோ அல்லது அவர் காலத்திற்குச் சற்றுப் பின்னரோ வாழ்ந்த ஒர் வைணவ பக்தரால் திருவேங்கடவன்மீது பாடப் பெற்றவை பூரீ வெங்கடேச ஸ்-ப்ரபாதம், ரீ வெங்கடேச ஸ்தோத்திரம், ரீ வெங்கடேச ப்ரபத்தி, பூரீ வெங்கடேச மங்களாசாஸனம் என்ற நான்கு வடமொழி நூல்கள். இவற்றை அடியொற்றித் தமிழில் 269. திருவாய். 5.4:11. ஒ 210. தத்துவத் திரயம் - ஈசுவரப் பிரகரணம் - சூத்திரம் 44, 45, 46, 47.