பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277


莺为 பூரீவெங்கடேச ஸாப்ரபாதத்தை வானெலி மூலம் செவிமடுக்காத தமிழர்களே இரார் எனலாம். தொண் டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி மணி வாசகப் பெருமானின் திருப்பள்ளியெழுச்சி பாரதி யாரின் 'பாரதமாதா திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களே அறிந்தவர்கள் நாம்; இறைவனைத் துயிலெழுப்புவதாகப் பாடும்மரபினை நாம் அறிவோம். அந்த மரபினையொட் டியதே வடமொழி ஸாப்ரபாதமரபும். வடமொழிப் பாசுரங்களை உள்ளம் உருக ஒதியும் பிறர் ஒதுங்கால் நெஞ்சுகுழைந்து ஈடுபட்டும் திளைக்கும் திரு. பத்மநாபன் அவர்களே நான் நேரில் பலமுறைப் பார்த்தவன். சுமார் பத்தாண்டுகட்கு முன்னர் அவரும் நானும் சில நண்பர் களுடன் அதிகாலையில் ஏழுமலையான வழிபட்டது. இன்னும் என் உள்ளத்தில் பசுமையாகவே உள்ளது. இனி மொழி பெயர்ப்பின் நேர்த்தியைக் கண்டு மகிழ்வோம். - ஏழுமலையான எழுப்புவதாக அமைந்த பாடல் : "பத்மே சமித்ர சதபத்ர சுதாலிவர்கா ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய கிஜாங்கலகம்யா பேரீகிநாதமிய பிப்ரதி தீவ்ரநாதம் சேஷாத்ரிசேகரவிபோ தவ ஸாப்ரபாதம்." இதன் தமிழ்க் கவிதையின் வடிவம் இது : "கதிரவன் தோழியாம் கமல மலரினில் வதியும் வண்டுகள் வண்கு வளைதன் கருநிற எழிலைக் காணப் பொருஅது அரவணைத் துயிலும் அரியின் அழகிய 212. ஸுப்ரபாதம்-12